32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Tata Harrier EV | Off roading இல் மாஸ் மஹாராஜா

Dinesh R சேலம் Published: 26/08/2025 2 நிமிட வாசிப்பு Updated: 27/08/2025 சமூகம்
எழுத்து அளவு:

டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹரியர் EV ஆகும். சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தக் கார் வாங்கப் பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள லக்ஷ்மி டாடா டீலர்ஷிப்பில் இதன் வெளியீடு இன்று நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் ஆஃப்-ரோடு அகாடெமியில் முற்றிலும் புதிய ஹரியர் EV-இன் செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்கான நிகழ்வில் லக்ஷ்மி டாடா சார்பில் வல்லுநர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வந்தவர்கள் டாடா ஹரியர் EV கரடு முரடான பாதையில் செய்த சம்பவங்களைப் பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

முற்றிலும் புதிய ஹரியர் EV இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 504 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை வெறும் 6.3 நொடிகளில் எட்டிவிடும். கரடு முரடான பாதையில் சீரான பயணத்தை உறுதி செய்ய ஏதுவாக இந்தக் காரில் ஆஃப்-ரோடு அசிஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

டாடா ஹரியர் EV மாடல் Boost, Sport, City மற்றும் ECO என நான்குவித டிரைவிங் மோட்களைக் கொண்டிருக்கிறது. இந்தக் காரில் வேரியண்டிற்கு ஏற்ப 65 கிலோவாட் ஹவர் மற்றும் 75 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது. இவ்விரண்டிற்கும் வெவ்வேறு மைலேஜ்கள் அமைந்துள்ளது. இவற்றுடன் 7.2 கிலோவாட் AC ஃபாஸ்ட் சார்ஜிங் யூனிட் வழங்கப்படுகிறது.

லக்ஷ்மி டாடா நிறுவனம் ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, ஈகாட்டுத்தாங்கள், வேளச்சேரி, ஓஎம்ஆர் ஆகிய ஆறு கிளைகளைகளையும், நான்கு சர்வீஸ் கிளைகளையும் கொண்டுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.