32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சிவண்ணா 131 – பிறந்தநாள் ஒருங்குகூடல்

Dinesh R சேலம் Published: 24/07/2024 1 நிமிட வாசிப்பு Updated: 27/07/2024 அயல் சினிமா
எழுத்து அளவு:

ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131ஆவது படத்திற்கான படப்பிடிப்பை பிரம்மாண்டமாகத் துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று சிவண்ணாவைச் சந்தித்தது. சிவன்னாவின் 131ஆவது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் படத்தொகுப்பாளர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது நாகவாரா இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் கார்த்திக் அத்வைத் இந்தப் படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமாகிறார். இது அவருக்கு இயக்குநராக இரண்டாவது படமாகும். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகத் தயாராகும் இப்படத்தில், சிவண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். ‘மோஸ்ட்’ புகழ், V.M.பிரசன்னாவும், ‘சீதாராமம்’ புகழ் ஜெயகிருஷ்ணாவும் இப்படத்திற்கு எழுத்தாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். ‘விக்ரம் வேதா’, ‘ஆர்டிஎக்ஸ்’, ‘கைதி’ புகழ் சாம் C.S. இசையமைக்க, A.J. ஷெட்டி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்தொகுப்பை தீபு S. குமார் செய்ய, கலை இயக்கத்தினை ரவி சந்தேஹக்லு செய்கிறார். இப்படத்தைப் புவனேஷ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் S.N. ரெட்டி மற்றும் சுதீர் P. தயாரிகின்றனர். ரமணா ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.