TNWAA – Tamil Nadu Women Achievers Awards . பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழ்நாட்டுப் பெண்களுக்கு, ‘தி பிராண்ட் ரீபப்ளிக்’ எனும் நிறுவனம் விருதுகள் வழங்கிக் கெளரவித்தன. இந்நிகழ்வு, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’டன் தொடங்கியது.
TNWAA வின் குறிக்கோள் என்பது, ‘வாழ்த்து, ஊக்கமளி, வல்லமை கொள்ளச் செய்’ என்பதேயாகும். சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பினைத் தங்கள் துறைகளில் செய்திடும் பெண்களை அடையாளம் கண்டு கெளரவிப்பதன் மூலம், அதனால் மேலும் பல பெண்கள் ஊக்கம் பெற்று, தத்தம் துறைகளில் வல்லமையோடு முன்னேறுவார்கள். இந்தியாவின் மூலைமுடுக்குகளில் உள்ள பெண்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் டிஜிட்டல் செயற்பாட்டுத்தளமாக TNWAA விளங்குமென ‘தி பிராண்ட் ரீப்ப்ளிக்’கின் இயக்குநர் ஆதித்யா அறிவித்தார்.
வெவ்வேறு துறையினைச் சேர்ந்த 15 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
1. Woman in Social Services – Dr. Renuka Ramakrishnan
தோலியல் நிபுணரான இவர், மூன்று தசாப்தங்களாகத் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளித்து வருகிறார். அவரது மகத்தான சேவைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
2. Woman in Special services – I.S. Yasmin
இந்தியாவிலுள்ள நான்கு தனியார் பெண் டிடெக்டிவில் இவரும் ஒருவர். இவரைப் பற்றி, Dr. சலீம் அக்பர், ‘Yes I am Yasmin’ எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.
3. Woman in Sports – Dr. P. Anitha
பத்மஸ்ரீ Dr.P.அனிதா, தனது 19வது வயது முதல் தேசிய கூடைப்பந்து அணிக்குக் கேப்டனாக இருந்தவர். சர்வதேச போட்டிகளில், 4 தங்கப்பதக்கங்களும், 2 வெள்ளிப்பதக்கங்களும் பெற்றவர்.
4. Woman in Media & Entertainment – Mrs. Sreeja Ravi
1980 முதல் டப்பிங் கலைஞராகப் பணி புரியும் ஸ்ரீஜா, ரம்பா, தேவயானி, கெளசல்யா முதலிய முன்னணி நாயகிகளுக்குப் பின்னணி குரல் தந்தவர். 1000 படங்களுக்கு மேல் பின்னணி குரல் தந்துள்ளார். ஐந்து முறை மாநில அரசின் விருது பெற்றுள்ளார்.
5. Woman in Inspiration – Ms. Vasanthy Nair
VNS மினரல்ஸ் எனும் நிறுவனத்தின் எம்.டி.யான இவர், தனது 17 வயது முதல் பணி புரிந்து வருகிறார். 25 வருடங்களாகச் சுரங்கவியல் துறையில் உள்ளார்.
6. Woman in Entrepreneurship – Ms. I. Priyadarshini
வேஸ்ட்வின் ஃபெளண்டேஷன் (Wastewinn Foundation) கம்பெனியின் நிறுவனரான இவர், திடக் கழிவுகள் மேலாண்மையின் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்குப் பெரும் பங்காற்றி வருகிறார்.
7. Woman in Lifestyle – Ms. Kamakshi Venkatraman
கேரள சுவர் ஓவியங்கள் (Kerala mural paintings) வரைவதில் விற்பன்னரான இவர், அக்ரைலிக் ஓவியம், காஃபி ஓவியம், கரி ஓவியம், நவீன ஓவியம் என பலவகை ஓவியங்களிலும் தேர்ச்சி பெற்ரவர். MICQ-இன் மூலமாக மூன்று முறை கின்னஸ் சாதனையைத் தக்க வைத்துக் கொண்டவர்.
8. Woman in Literature – Ms. Manushi
ஜெயபாரதி எனும் இயற்பெயருடைய இவரொரு கவிஞர். பெண்களின் வலிகள், நிறைவேறாத கனவுகளைக் கருவாக்க் கொண்டு எழுதும் இவர், தனது எழுத்திற்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
9. Woman in Business – Ms. Uma Maheshwari
M/s Ananya Shelters எனும் நிறுவனத்தின் இணை இயக்குநரான இவர், சீனியர் சிட்டிசன்கள் தங்கள் வாழ்வை மனத்திருப்தியுடன் கழிக்க உதவி வருகிறார்.
10. Woman in Arts & Culture – Ms. Ponni Karuppasamy
திருநங்கையான இவர், பல தடைகளைத் தாண்டி, நடனக்கலைஞராகத் தனக்கெனதொரு தனித்துவ அடையாளத்தைப் பெற்றுள்ளார். தனது நடனப்பள்ளியான ‘அபிநய நித்தியாலயா’ மூலம் பலரைக் கலைஞர்களாக உருவாக்கி வருகிறார்.
11. Woman in Leadership – Ms. Chandrakala
ஆட்டோமொபைல் துறையில் 20+ ஆண்டுகளாகக் கோலேச்சுகிறார். Hanon ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ்-இன் தெற்காசிய இயக்குநராகப் பணி புரிகிறார். ‘திறமையும் அர்ப்பணிப்புமே வெற்றிக்கான வழி’ என்ற கொள்கையுடையவர்.
12. Woman in Science & Technology – Dr.P.N.Sudha
DKM மகளிர் கல்லூரியின் முதல்வரான இவரை, முதன்மை 2% விஞ்ஞானிகளில் ஒருவராக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது.
13. Woman in Legal Services – Ms. Sneha Parthibaraj
No caste, no religion சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற, இவர் 9 ஆண்டுகள் போராடியுள்ளார்.
14. Woman in Academics – Dr. N.Akila
KPRIET இல் முதல்வராகப் பணிபுரியும் இவர், 20 ஆண்டுகளாகக் கணினித் துறையில் பேராசிரியராகப் பணி புரிகிறார்.
15. Woman in Agriculture – Tmt. Paapammal
105 வயதிலும் விவசாயத்தில் ஈடுபட்டு ஆச்சரியப்படுத்தி வரும் இவரை, தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழகம் அங்கீகரித்துள்ளது.
சாதனையாளர்களுக்கு விருது அளித்துக் கெளரவித்த நிகழ்ச்சியின் ஊடாக, சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள், தங்கள் திறமையை நயமுற வெளிக்காட்டும் விதமாகச் சிறுமிகளும் இளம்பெண்களும் கலைநிகழ்ச்சிகளில் பங்குகொண்டு பார்வையாளர்களின் உள்லத்தைக் கவர்ந்தனர்.