32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மே 12 முதல் ‘உள்குத்து’

Dinesh R சேலம் Published: 27/04/2017 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Ulkuthu movie

‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்குப் பிறகு தினேஷும் நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘உள்குத்து’.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அதிரடியான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படத்தைக் கார்த்திக் ராஜு இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷைக் காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘பி கே பிலிம் பேக்டரி’ ஜி.விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் வருகின்ற மே 12 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

“தரமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் வெற்றி கண்டு வருவது எங்களை அதிகளவில் ஊக்குவிக்கின்றது. இப்போதெல்லாம், ‘நல்ல தரமான கதையம்சம் நிறைந்த படங்களை அதிகளவில் திரையிடுங்கள்’ என்று தான் திரையரங்கு உரிமையாளர்களிடம் ரசிகர்கள் கேட்கின்றார்கள். அதை நிரூபிக்கும் வண்ணமாக எங்களின் உள்குத்து திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படும். எங்களுக்கு உறுதுணையாய் இருந்து, தன்னுடைய பேராதரவை அளித்து வரும் அபினேஷ் இளங்கோவன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், ‘பி கே பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் நிறுவனருமான ஜி.விட்டல் குமார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.