Shadow

நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்

Vishal in Naalai Namadhey

தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் மூன்று பரிமாணங்களில் முதன் முறையாகத் தோன்றும் “நாளை நமதே” படத்தை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குநர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதீஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.