ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க, பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களைத் தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம் “அர்ஜுன் ரெட்டி”.
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்டா படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் A.N.பாலாஜி, “தெலுங்கில் ‘துவாரகா’ என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படத்தைத்தான் தமிழில் ‘அர்ஜுன்ரெட்டி’ என்ற பெயரில் தயாரித்துள்ளோம்.
அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான விஜய்தேவர் கொண்டாவின் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே! நோட்டா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் விஜய் தேவர்கொண்டா. இந்தத் தமிழ் ‘அர்ஜுன்ரெட்டி’ படமும் தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
காதல், ஆக்ஷன், கமர்ஷியல் மூன்றும் ஒருசேர கலந்த கலவைதான் இந்த அர்ஜுன்ரெட்டி. அந்த அர்ஜுன் ரெட்டியைப் போலவே இந்த அர்ஜுன்ரெட்டியும் மிகுந்த வரவேற்பைப் பெறும்” என்றார் A.N.பாலாஜி.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
>> ஒளிப்பதிவு – ஸ்யாம் கே.நாய்டு
>> இசை – சாய்கார்த்திக்
>> படத்தொகுப்பு – பிரேம்
>> தயாரிப்பு – A.N.பாலாஜி
>> கதை திரைக்கதை இயக்கம் – ஸ்ரீனிவாச ரவீந்திரா