Shadow

Tag: மணவை புவன்

மரகத மலை – தமிழ்த் திரையில் முதல் முறையாக டிராகன் | சிறார் படம்

மரகத மலை – தமிழ்த் திரையில் முதல் முறையாக டிராகன் | சிறார் படம்

சினிமா, திரைச் செய்தி
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகசக் காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ள படம் 'மரகதமலை' ஆகும். அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் படத்தைத் தயாரித்தும் இருக்கிறார்.இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.அறிமுக இயக்குநரான லதா, "புலி, பாம்பு,...
Sweety Naughty Crazy விமர்சனம்

Sweety Naughty Crazy விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய கலகலப்பான 18+ படம். கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவற்றை யாரும் தங்கள் கனவிலும் படைப்பிலும் கூட மீறிவிடக்கூடாது என நினைக்கும் பூமர்ஸ்களின் ரத்தக்கொதிப்பை எகிற வைக்கும் கதைக்கருவைக் கொண்ட படம். போடுவது, ஓட்டுவது, ஏறுவது என்ற வார்த்தை விளையாட்டுகளைப் பயன்படுத்தியே கலகலக்க வைத்தாலும், குடும்பத்திற்குள்ளான தகாப்புணர்ச்சியை (incest) நகைச்சுவைக்கு உட்படுத்தியுள்ளது சிறு நெருடலை ஏற்படுத்தலாம். ஆனால், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ராஜசேகர். G, பார்வையாளர்களோடு அழகாகக் கண்ணாமூச்சி ஆடியுள்ளார். அந்நியோன்யமான தருணங்களை உருவாக்கிக் காட்சியைக் கத்தரித்து விடுகிறார். 'இருக்குன்னு நினைச்சா இருக்கும், இல்லைன்னு நினைச்சா இல்லை' என்பதாகப் பார்வையாளர்களின் கற்பனைக்குச் சாமர்த்தியமாக விட்டு விடுகிறார். தமிழ் இலக்கியத்தில், தன்னிலும் வயது முதிர்ந்த பெண்ணை விரும்பும் ஆணின்...
EMI – ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

EMI – ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

சினிமா, திரைச் செய்தி
சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் "EMI - மாதத் தவணை" ஆகும். இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது. தற்போதைய உலகில், 20000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட, அதை முழுப் பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை, எல்லோரும் இ.எம்.ஐ. -இல் போட்டுத்தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ், மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவரவர் தகுதிக்குத் தகுந்த மாதிரி ஏதோ ஒன்று, காரோ, பைக்கோ, இ.எம்.ஐ. போட்டுத்தான் வாங்குகிறார்கள். இந்த மாதிரி லோன் எடுத்துவிட்டு, இரண்டு மூன்று மாசம் தவணை கட்டவில்லையென்றால் மேனேஜரில் இருந்து, கடைசி ஸ்டாப் வரைக்கும் கால் பண்ணி டார்ச்சர் பண்ணத் தொடங்குவார்கள். இதை நிச்சயமாக 90% மக்கள் அனுபவிக்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களின் கதை தான் ...
காடுவெட்டி விமர்சனம்

காடுவெட்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காடுவெட்டி குருவைப் பற்றிய கதை இல்லை இப்படம். ஆனால், காடுவெட்டி என்கிற தலைப்பைப் பார்த்ததும், அதன் அரசியல் என்னவாக இருக்கும் என யூகிக்கிறார்களோ, அதை ஒரு சதவிகிதம் கூட ஏமாற்றாமல் தந்துள்ளனர். ஆணவக் கொலைகளுக்குக் காரணம் ஆதிக்க சாதியினர் இல்லை என்றும், அதற்கு யார் உண்மையில் காரணம் என்றும், ஓர் அரிய கண்டுபிடிப்பையே நிகழ்த்தியுள்ளார் இயக்குநர் சோலை ஆறுமுகம். நகரத்தில் ஒரு காதல் ஜோடி. வெவ்வேறு சாதியைச் சார்ந்த அந்த ஜோடிக்குப் பெற்றோர்களே முன் நின்று கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள். அடுத்து, அதே ஜோடி, அதே குடும்பம், அதே ஜோடி, அதே பெற்றோர்கள், அதே காதல் கிராமத்தில் நிகழ்ந்தால், அதற்குப் பின்னணியில் என்னவெல்லாம் நடக்கும் என இரண்டு கதைகளை ஒப்பிடுகிறார். நகரத்துக் காதல் சுபமாகிறது, கிராமத்துக் காதல் ஏன் ஆணவக்கொலையில் முடிகிறது என கதை பயணிக்கிறது. படத்திற்குக் கதையும் தயார், அரசியலும் தயார், ஆனால் பாவம்...
பேய காணோம் விமர்சனம்

பேய காணோம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படாதபாடுபட்டு ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து, படமொன்றை இயக்கச் செல்கிறார் செல்வ அன்பரசன். அங்கே நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களால், அதுவரை எடுக்கப்பட்ட படம் அனைத்தும் வினோதமான முறையில் மறைந்துவிடுகிறது. காணாமல் போன ஒரு பேய்தான் அதற்கு காரணமான தெரிய வருகிறது. பேயைக் கண்டுபிடித்துப் படத்தை முடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பேயாக மீரா மிதுன் நடித்துள்ளார். ஒப்பனை கலைஞருக்கு யார் மீது என்ன கோபமோ என்ற எண்ணத்தை எழுப்பும் வண்ணம், மீரா மிதுனிற்கான ஒப்பனை அமைந்துள்ளது. நாயகனாக G. கெளசிக்கும், நாயகியாக சந்தியா ராமசந்திரனும் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு உதவாத பாத்திரத்தில் முல்லை கோதண்டம் தோன்றியுள்ளார். கதை, திரைக்கதையும் மிகவும் பலவீனமாக உள்ளது. ஃப்ளாஷ்-பேக் காட்சிகயில் வரும் தருண் கோபி – மீரா மிதுன் கதையும் கூட ரசிக்கும்படியாக எடுக்கப்படவில்லை. படத்திற்குள் எடுக்கப்படும் படத்தை இயக்குபவராக...
Dr. 56 விமர்சனம்

Dr. 56 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அம்பத்தாறு நிமிடங்களுக்கு ஒருமுறை மாத்திரை எடுத்துக் கொள்ளாவிட்டால் இறந்துவிடக்கூடிய நபரொருவர், ஒரு விஞ்ஞானியையும் இரண்டு மருத்துவர்களையும் கொன்ற குற்றத்திற்காக்க் கைது செய்யப்படுகிறார். அவர் யார், அவருக்கும் அந்தக் கொலைகளுக்கும் தொடர்பு என்பதே படத்தின் கதை. அந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியாக பிரியாமணி நடித்துள்ளார். மிடுக்கான நடை, அலட்சியமான பார்வை என்று புறத்தோற்றத்தில் அசத்தலான அதிகாரியாக உள்ளார். கிடைக்கும் துப்புகளை ஒருவரைச் சட்டென கைதும் செய்துவிடுகிறார். ஆனால், உண்மையான குற்றவாளியோ, வழக்கிற்கு உதவுவது போல் ப்ரியாமணியிடம் குற்றத்தைப் பற்றி ஒப்பிக்கிறார். ‘சாவதற்கு முன் உண்மைகளை சி.பி.ஐ. அதிகாரி அறிந்து கொள்ளட்டுமே!’ என்ற நல்லெண்ண அடிப்படையில் வில்லன் செயல்படுவது திரைக்கதைக்கு வேட்டு வைக்கும் காரியம். குற்றங்களை மூடி மறைப்பதோடு மட்டுமல்லாமல், சிபிஐ அதிகாரியையே கொல்ல...
ரிலாக்ஸ் – மூன்று பெண்களால் காதலிக்கப்படும் நாயகன்

ரிலாக்ஸ் – மூன்று பெண்களால் காதலிக்கப்படும் நாயகன்

சினிமா, திரைச் செய்தி
ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திற்கு ரிலாக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய டேவி சுரேஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் பழனி பாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார். ஹிந்தியில் வெளியான 'திருட்டுப்பயலே 2' படத்திற்கு எடிட்டிங் செய்த ராம் சதீஷ் இந்தப் படத்திற்கு எடிட்...
கடமையை செய் விமர்சனம்

கடமையை செய் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'முத்தின கத்திரிக்கா' படத்தை இயக்கிய வெங்கட் ராகவனின் அடுத்த படைப்பு. இவர் இயக்குநர் சுந்தர். சி-யிடன் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். சிவில் இன்ஜினியரான எஸ்.ஜே.சூர்யா, தேவ் பில்டர்ஸ் கட்டிய அடுக்குமாடி கட்டடமொன்று இடிந்து விழும் தருவாயில் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரைப் பேசவிடாமல் செய்ய, வேன் இடித்து அவரைக் கொல்லப் பார்க்கின்றனர். அவ்விபத்தால், அவர் ஸ்டூப்பர் (Stupor) நிலைக்குச் சென்றுவிடுகிறார். அதாவது, மூளை விழிப்பு நிலையில் இருந்தாலும், உடல் இயக்கம் ஸ்தம்பித்துவிடும். அவர், தன்னைச் சுற்றி நடப்பனவற்றை அனைத்தையும் கவனிப்பார், பேச நினைப்பார் ஆனால் அவரால் முடியாது. இந்தக் குறைபாடுகளை மீறி எப்படி எஸ்.ஜே.சூர்யா, அந்தக் குடியிருப்பில் வாழ்பவர்களை எப்படிக் காப்பாற்றுகின்றார் என்பதுதான் படத்தின் கதை. மிக சீரியசான கதையில், சேஷு, மொட்டை ராஜேந்திரன் போன்றோர்களைக் கொண்டு நகைச்சுவைக்கும் மு...
“பாகவதர் காலத்துல இருந்து சினிமாவில் வராத கதை” – எஸ்.ஜே.சூர்யா

“பாகவதர் காலத்துல இருந்து சினிமாவில் வராத கதை” – எஸ்.ஜே.சூர்யா

சினிமா, திரைத் துளி
சுந்தர்.சி-யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் வெங்கட் ராகவன், “கடமையை செய்” எனும் படத்தை இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆன்ந்த், மொட்டை ராஜேந்திரன், சேஷு, வின்சென்ட் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்பட்த்தைப் பற்றிப் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து, அதாவது சினிமா தோன்றிய காலத்திருந்து வராத கதையை இயக்குநர் எடுத்துள்ளார். அதை என்னால் உறுதியாகக் கூற முடியும். கோமா பற்றி நம்ம எல்லாருக்கும் தெரியும். அதில் ஸ்டூப்பர்ன்னு ஒன்னிருக்கு. கோமா என்றால், ப்ரெயின் டெத், பாடி டெத், ஆனா உள்ளிருக்க்க் கூடிய இன்னர் ஆர்கன்ஸ் மட்டும் வொர்க் பண்ணிட்டிருக்கும். அதாவது, ஹார்ட், கிட்னி போண்றவை வொர்க் பண்ணும். ஆனா மொத்த சிஸ்டம் ஷட். ஸ்டூப்பர் என்பது என்னென்னா, ப்ரெயின் ஆக்டிவாக இருக்கும். பாடி டெத். அவனால் பேச முடியும். ஆனா வெளில இருக்கிறவங்களுக்குக் கேட்காது. அப்படியொரு...
திரெளபதி விமர்சனம்

திரெளபதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தென்னாற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் 'திரெளபதி அம்மன்' கோயிலும், அக்கோவிலில் நிகழும் சித்திரை தீ மிதி திருவிழாவும் மிகவும் பிரசித்தி. விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கதை நிகழுவதாகக் காட்டப்படும் இப்படத்தின் பிரதான பெண் பாத்திரத்தின் பெயர் திரெளபதி. ஊருக்கு ஒன்றெனில் முதலாளாக முன்னிற்கும் தைரியமான பெண்மணி. இவரைப் போலவே, படத்தில் இன்னும் இரண்டு பெண் பாத்திரங்களும் வலுவானதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் முறையே ஓர் அரசு மருத்துவரும், ஒரு பத்திரிகையாளரும் ஆவர். தைரியமான பெண் என்பதற்கான குறியீடாய் இத்தலைப்பினைக் கொள்ளலாம். பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ட்ரெய்லரின் மூலம் அருமையான கவன ஈர்ப்பினைப் பெற்றுவிட்டது படம். படத்தின் வில்லனாக இயக்குநர் யாரைச் சுட்டுகிறார் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரிகிறது. எனினும், மிகப் புத்திசாலித்தனமாய், ஒரு பொதுப் பிரச்சனையைப் பற்றிப் பட...
மயூரன் விமர்சனம்

மயூரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மயூரன் என்றால் 'உன்னைக் காப்பவன்' அல்லது 'வெற்றி புனைபவன்' என்கிறார் இயக்குநர் நந்தன் சுப்பராயன். இவர் பாலாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். 'உன்னைக் காப்பவன்' என்ற பொருளே படத்தின் தலைப்பிற்குப் பொருந்தும். அதனால் தா  நாயகனுக்கு சேகு எனும் சே குவேரா என்று பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர். சிதம்பரத்திலுள்ள பொறியியல் கல்லூரி விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் நாயகனின் அறை தோழன் ஒருவன் காணாமல் போகிறான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும், அவனைத் தேடும் நாயகனுக்கு என்ன சிக்கல் ஏற்படுகிறது என்பதும்தான் படத்தின் கதை. மயூரனாகிய நாயகனால் தன் நண்பனைக் காப்பாற்ற முடியவில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவே மிகவும் மெனக்கெடுகிறான். தனக்கு ஏதும் நிகழாமல் தன்னைத் தானே நாயகன் காப்பாற்றிக் கொள்வதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். மயூரன் தன்னைக் காப்பாற்றிக் கொள்பவனாகச் சுருங்கிக் கொள்கிறான். படத்தின் கதைக்...
மல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம்

மல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம்

சினிமா, திரைத் துளி
முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க, ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் 'மல்லி'. ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிஃபோன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார். "பெற்றோரின் காதல் எதிர்ப்பிற்குப் பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள். அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள். மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா ராணி ஆகிறார்கள். அது எப்படி அப்படி ஆனார்கள்? உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு எப்படி அரசாட்சி செய்கிறார்கள்? அவர்களுடைய மக்கள் யார்? என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும். இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர் ...
நிகிஷா பட்டேலின் லட்சியம்

நிகிஷா பட்டேலின் லட்சியம்

சினிமா, திரைத் துளி
"பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தைத் தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார். படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபஎஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது . இப்படத்தைத் தவிர எழில் சார் இயக்கியுள்ள, 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்திலும், இயக்குநர் கஸ்தூரி ராஜா சார் இயக்கத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்ற 'பாண்டி முனி' படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயரிடப்படாத படத்திலும், நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன். ...