32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

விஜய் சேதுபதி | பிக் பாஸ் சீசன் 8 – ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு

Dinesh R சேலம் Published: 24/09/2024 1 நிமிட வாசிப்பு Updated: 25/09/2024 Teaser
எழுத்து அளவு:

விஜய் டிவியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்குக் கோலாகலமாகத் துவங்குகிறது. சமீபத்தில் மிகப் புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8இன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பற்றி, மக்கள் அறிவுரை சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டு, அசத்தலாகக் களமிறங்கும் விஜய் சேதுபதி, “உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.., இந்த வாட்டி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனும் டேக் லைனைச் சொல்லி முடிக்கும் ட்ரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி களமிறங்குவது, மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல புது ஆச்சரியங்களுடன், புதுப்பொலிவுடன் “பிக்பாஸ் சீசன் 8” பார்வையாளர்களைப் பரவசப்படுத்த வருகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.