Search

விஜய் ‘சேதுபதி’ – குற்றாலம் டூ தாய்லாந்து

VJS-to-Thailandபாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் பட நிறுவனமான கே புரொடக்சன்ஸ், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து சூப்பர் ஹிட்டான பியார் பிரேமா காதல் வெற்றிப் பபடத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது.

40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்படத்தின் பெரும்பகுதி வெளி நாட்டில் படமாகிறது என்பது சிறப்பம்சம். அந்தளவுக்கு கதையும் சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளி நாடுகளில் நடத்துகிறோம்” என்றார் இயக்குநர் அருண்குமார்.

சேதுபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் கமர்ஷியல் ஃபார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமான இதன் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

>> ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக்
>> படத்தொகுப்பு – ரூபன்
>> இசை -யுவன் சங்கர்ராஜா
>> தயாரிப்பு மேற்பார்வை – சிவசங்கர்
>> தயாரிப்பு -S.N.ராஜராஜன், யுவன்சங்கர்ராஜா, இர்பான்மாலிக்

எழுதி இயக்குகிறார் அருண்குமார்.