
அறிமுக கதாநாயகனான துருவ் விக்ரம், “ஆதித்யா வர்மா படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்திக் கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. இசையமைப்பாளர் ரதன் உழைப்பு மிகப் பெரியது. கிரிசாயா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர்.
தனுஷ் (படத்தில் நண்பனாக நடித்தவர்) முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா (படத்தின் இணை இயக்குநர்) நல்ல உழைப்பாளி. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூடப் படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார். எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாகச் செய்வார்.
அன்புதாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அப்பாவும் இந்தப் படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எஃபெர்ட் தான் படமே. அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்தில் உழைத்த அத்தனை டெக்னிஷியன்களுக்கும் நன்றி.
நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார். நான் சுமாராக நடித்த காட்சிகளில் தான் நான் இருப்பேன். நான் பிறந்ததில் இருந்தே எனக்கு சினிமான்னா பிடிக்கும். அதைப்போல் எனக்கு அப்பான்னா ரொம்பப் பிடிக்கும். இந்த இடத்தில் நான் நிக்கிறது, நான் நடிக்கிறது எல்லாமே என் அப்பா தான். இந்த வெற்றிக்கான க்ரெடிட் எல்லாமே என் அப்பாவிற்குத் தான் சேரும். இந்த வயதில் எனக்கு கிடைத்த வாய்ப்பு என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால் அவர் வேற லெவல்ல இதைச் செய்திருப்பார்” என்றார்.
நடிகர் விக்ரம், “இது அருமையான தருணம். ஒரு இதழில் விமர்சனம் எழுதி இருந்தார்கள். “துருவ் சியான் விக்ரமின் மகன் நேற்று. துருவின் அப்பா சியான் விக்ரம் இன்று. சபாஷ்” என்று எழுதி இருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரு தந்தைக்கு இதைவிட பெருமை இருக்க முடியாது.
இந்தப் படத்தில் ஐந்து முக்கியமான விசயங்கள் இருக்கு. இப்படத்தின் மூலக்கதாசிரியர் சந்தீப்பிற்கு முதல் நன்றி. துருவின் டப்ஸ்மாஷ் பார்த்துவிட்டு இவனால் நடிக்க முடியும் என்று நம்பி என் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் முகேஷ் சாருக்கு நன்றி. இந்தப் படத்தை துருவால் நல்லா பண்ண முடியும்னு கான்ஃபிடென்ட் இருந்தது. ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன் அவர்களுக்கும் நன்றி. அவர் ஒளிப்பதிவாளராக வந்ததால் படத்திற்குp பெரியபலம் கிடைத்தது. அன்புதாசன் இந்தப்படத்தோட இன்னொரு பலம். அவனை நான் அதிகமாக டார்ச்சர் பண்ணேன். அது நல்ல கேரக்டர். அவனும் சிறப்பாக நடித்திருந்தான். துருவை அடிக்கும் காட்சியில் திணறினான். பின் சரியாகச் செய்துவிட்டான்.
அன்புதாசன் பேசுற டயலாக்ஸ் எல்லாம் வினோத்மாரி எழுதியது. அவருக்கும் நன்றி. ராஜசேகர் நேர்த்தியான வசனங்கள் எழுதினார். மேலும் என் ரசிகர்களுக்குப் பெரிய நன்றி. என் படம் அளவிற்கான எல்லா ரெஸ்பான்ஸையும் என் மகனுக்கும் கொடுத்திருந்தார்கள். அது ரொம்ப பெரிய விசயம். இந்தப் படம் கிரிசாயா இயக்கா விட்டால் இப்படி வந்திருக்காது. நான் கேட்ட எல்லா விசயங்களையும் செய்து தந்தார் தயாரிப்பாளர் முகேஷ் சார்.
இசையமைப்பாளர் ரதனிடம், ‘நீ பெரிய இசை அமைப்பாளராக வருவே!’ என்று நான் சொன்னேன். அது நடக்கும். இந்தப் படத்தோட சோல் (ஆத்மா)/எல்லா உதவி இயக்குநர்கள்” என்று மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் பேசினார்.