சீயான் விக்ரம் தனது அடுத்த படத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 Aவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ள இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சினிமாதிரைத் துளி
விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் ஸ்டுடியோ க்ரீன் 23ஆவது படம்
By Dinesh RDec 02, 2021, 19:33 pm0
Previous Postமாற்றுத் திறனாளிகள் தினம் – ‘இன்ஸ்பயரிங்’ மாயோன்
Next Postத்ருஷ்யம் 2 – மீண்டும் சுஜா வருணி