Shadow

“பளிங் சடுகுடு சடுகுடு” – வெண்ணிலா கபடி குழு 2

vennila-kabadi-kuzhu-2

2009 ஆம் ஆண்டு கபடி போட்டியைப் பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாத் தரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை, இயக்குநர் செல்வசேகரன் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“வெண்ணிலா கபடி குழுவிற்கு பார்ட் 2 செய்தால் எப்படியிருக்குமென சுசியிடம் ஒரு ஐடியா சொன்னேன். நீங்களே பண்ணால் நல்லாயிருக்கும் என்றார். நீங்க சிறப்பாகச் செய்வீங்கன்னு தெரியும். நான் படத்தைத் தியேட்டர்லதான் பார்ப்பேன் எனறு சொல்லிவிட்டார். நான் முழு ஸ்க்ரிப்ட் முடிச்சு, படப்பிடிப்பு தொடங்கிட்டேன். வெண்ணிலா கபடி குழு போல இப்படமும் ஜெயிக்கும்.

கபடி போட்டியோடு, கிராமத்தின் நேட்டிவிட்டியும் இப்படத்தில் இருக்கும். ஸ்போர்ட்ஸ் மேனான விக்ராந்த் நடிச்சால் நல்லாயிருக்குமென சுசியிடம் சொன்னேன். எங்கள் குழுவில் ஒரு யூத் இருந்தால் நல்லாயிருக்குமென நினைத்தேன். அதனால் ஒளிப்பதிவாளர் கிச்சாவைப் பயன்படுத்தியுள்ளேன்” என்றார் இயக்குநர் செல்வசேகரன். மேலும், 1987 ஆம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிக விமரிசையாகத் திருவிழா போல் கபடி விளையாட்டுப் போட்டியைக் கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண் முண்னே கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.

சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.

நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட மின்னொளி கபடி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து தத்ரூபமாகப் படமாக்கியுள்ளார்கள். அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக “வெண்ணிலா கபடி குழு 2” படம் அமையும்.

>> இசை – செல்வகணேஷ்
>> ஒளிப்பதிவு – E. கிருஷ்ணசாமி
>> சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்
>> மக்கள் தொடர்பு – P.T.செல்வகுமார்