32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“ரைட்டர்: தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை” – பா.ரஞ்சித்

Dinesh R சேலம் Published: 20/12/2021 2 நிமிட வாசிப்பு Updated: 25/01/2022 சினிமா
எழுத்து அளவு:

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித், “தயாரிப்பாளர் அதிதி என் ரசிகையாக என்னைச் சந்தித்தார். காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார். பிறகு ரைட்டர் படத்தைப் பற்றிப் பேசி இப்படத்தைத் தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர் நான் இயக்கும் படத்தைத் தயாரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை. அதிதிக்கு சமூக அக்கறை உள்ள படங்களைத் தயாரிக்க மிகவும் ஆசை. பிறகு எங்களுடன் இணைந்தவர்கள் தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஐந்து படங்கள் தயாரிக்கலாம் எனப் பேசி முடிவெடுத்தோம். கதைத்தேர்வில் நான் பிடிவாதமாக இருந்தேன். கதை எனக்குப் பிடித்திருக்க வேண்டும். தவறான அரசியல் பேசக்கூடாது. எனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து, மக்களுக்குச் செல்லும் படம் சரியான படமாக இருக்கவேண்டும் என நினைத்தேன். ரைட்டர் படத்தைத் தயாரிக்க நான் முன்வந்த காரணம் இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் இருந்தது தான்.

இப்படம் சிறப்பாக இருக்கும் என கதை படிக்கும்போதே எனக்குத் தோன்றியது. படப்பிடிப்பின்போது இப்படம் டெக்னிக்கலாகவும் படம் அருமையாக வரும் என நினைத்தேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்திலும் அவரது பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் சமுத்திரக்கனி அண்ணனைச் சந்திக்கலாம் என்று கூறினேன். நான் எதுவும் சொல்லாமலேயே கதையைப் படித்துவிட்டு, கதை சூப்பர், கண்டிப்பாகப் பண்ணலாம் என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். கண்டிப்பாக தங்கராஜ் ஆக வாழ்ந்துள்ளார் என்று சொல்லவேண்டும். மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இப்படத்தில் அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.