Shadow

“ரைட்டர்: மாறுபட்ட கோணத்தில் போலீஸின் வாழ்க்கை” – இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புகாட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

படம் பார்த்த பிறகு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் பிராங்க்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

“மிக முக்கியமான படத்தைத் தமிழ் சினிமாவிற்குத் தந்திருக்கிறார்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாகத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களைத் தயாரித்து வரும் இரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்களும் அன்புகளும்.

ரொம்ப நாளுக்கு முன்பாகவே விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயத்தைத் தொட்டுள்ளனர். இதை யாரும் இதுவரை பேசவில்லை. நாம எப்பொழுதும் சினிமாவில் போலீஸைக் காண்பிக்கும் விதமென ஒன்றிருக்கும் இல்லையா, இப்படம் அதிலிருந்து மாறுபட்டு போலீஸ்காரர்களின் வாழ்க்கையை வேறொரு கோணத்தில் அணுகியிருக்கு. அவர்களோட ப்ரஷர், ஸ்ட்ரெஸ் பற்றிப் பேசியிருக்கு. அதோடு மற்ற முக்கியமான விஷயங்களைப் பற்றியும் படம் பேசுகிறது” என அறிமுக இயக்குநர் பிராங்க்ளினை வெகுவாகப் பாராட்டினார்.

(எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், பொதுவெளியில் முக கவசம் அணிந்து கொள்ளும் வழக்கத்தை மிக உறுதியாகக் கடைபிடித்து  வரும் இயக்குநர் வெற்றிமாறனுக்குப் பிரத்தியேக பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 💐)