32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

யோகிபாபுவின் ”ஜோரா கையத் தட்டுங்க”

Inbaaraja சேலம் Published: 29/05/2024 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

“தீக்குளிக்கும் பச்சை மரம் ” திரைப்படத்தை இயக்கிய திரு.வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில், WAMA Entertainment Banner ல் திரு. ஜாஹிர் அலியின் தயாரிப்பில் மற்றும் Saravana Film Arts ன் திரு.சரவணன் அவர்களின் இணை தயாரிப்பில் நடிகர் “யோகி பாபு” இது வரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் “ஜோரா கைய தட்டுங்க”  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் வெளியிட்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு. மது அம்படின் ஒளிப்பதிவில்,திரு. S.N. அருணகிரியின் இசையில்,தேசிய விருது பெற்ற திரு. சாபு ஜோசப்பின் Editingல்,ஜித்தன் ரோஷனின் பின்னணி இசையில் யோகி பாபுவின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் post production வேலைகள் கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில்  திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் ஹரிஸ் பேரடி, விக்ரம் புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி, மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ‌‌ஶ்ரீதர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.