Shadow

NSI இன் ‘இளம் நியூரோசர்ஜண்ஸ் ஃபோரம்’

‘நியூராலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Neurological society of India)’ என்கிற அமைப்பு, 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 3200 அங்கத்தினரோடு திறம்படச் செயற்பட்டு வருகிறது.

இதன் ஒரு கிளைதான், ‘யங் நியூரோசர்ஜன்ஸ் ஃபோரம் (Young Neurosurgeons Forum)’ ஆகும்.

நரம்பியல் அறுவை சிகிச்சையில் (Neurosurgery) முதுகலை பட்டம் பெற்று, பத்து வருடங்கள் பயணித்து, 45 வயதிற்குள் இருந்தால், இந்த அமைப்பில் அங்கத்தினராகச் சேர இயலும்.

இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் இத்துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் புதிய வளர்ச்சி பரிமாணங்கள் போன்றவற்றைப் பற்றி விவாதிக்க, செயற்பாட்டு முறைகளைப் பற்றி கலந்துரையாடவும் இரண்டு நாள் மாநாடு (ஜூன் 11 & 12) ஏற்பாடாகியிருந்தது.

இந்தியா முழுவதிலிருந்தும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்மாதிரியான அமைப்புகளை மேலும் நிறுவவும், இத்துறையின் வருங்கால வளர்ச்சிப்பாதையில் திறம்படப் பயணிக்கவும், சமீபத்திய மாறுதல்களையும் கோட்பாடுகளை உணர்தறிந்து சிறப்பாகச் செயல்படவும் இவ்விரண்டு நாள் மாநாடு வழிவகுத்ததென்றால் அது மிகையில்லை. ஆய்வு கட்டுரைகள், கருத்தரங்கு விவாதங்கள் ஆகியனவும் மாநாடு ஏற்பாட்டில் அடக்கம்.