Shadow

சுழல் | போலீஸ் ரெஜினாவாக ஷ்ரேயா ரெட்டி

அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் முழு நீள தமிழ் ஒரிஜினல் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ வெளியாக உள்ளது. தொடரில் நடித்த திறமையான நடிகர்கள் படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியுடன் வெளியிட்டு வருகின்றனர். முன்னணி நடிகை ஷ்ரேயா ரெட்டி, தீவிர படப்பிடிப்பின் போது, திரையில் போலீஸ் உடை அணிந்து, திரைக்குப் பின்னால் அவர் செய்த வேடிக்கையான விஷயங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், ஷ்ரேயா, ரெஜினா என்ற போலீஸ்காரராக நடிக்கிறார், ஊட்டி நகரத்தில் ‘தி சுழல் கர்ஜனை’ தீம் டிராக்கை பின்னணியில் ஒலிக்கவிட்டு அவர் செய்த உடற்பயிற்சியை வீடியோவில் காணலாம். இந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, “This is what Regina does when she’s off duty #suzhalonprime #Suzhal” என்பதாகும்.

நடிகையாகவும், உடற்பயிற்சி ஆர்வலராக இருக்கும் ஷ்ரேயா ரெட்டி, இந்த தீவிரமான க்ரைம்-த்ரில்லரின் படப்பிடிப்பின் போது திரைக்குப் பின்னர் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

“ஒரு தீவிரமான காட்சியைப் படமாக்கும் போது எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை. காபி இல்லை, டீ இல்லை, இசை கூட எனக்கு உதவவில்லை. அதனால் குளிர் தாக்கும் ஊட்டியில் மீண்டும் என் கதாபாத்திரத்திற்குள்ளேயே செல்ல நான் முடிவு செய்தேன். இதுதான் ஒரே வழி என்று எனக்குத் தோன்றியது” என்கிறார். இந்த வேடிக்கையான வீடியோவில், இன்ஸ்பெக்டர் சக்கரையாக நடிக்கும் சக நடிகர் கதிருடன் ஷ்ரேயாவின் தோழமையை நாம் காணலாம்.

புலனாய்வுத் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’-ஐ, பிரம்மா மற்றும் அனுசரண். M இயக்கத்தில், புஷ்கர் மற்றும் காயத்திரி ஆகியோரின் எழுத்து மற்றும் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவினர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரத்தில் காணாமல் போன ஒரு பெண்ணைத் தேடும் போது, கண்டுபிடிக்கபடும் ஆச்சரியம் நிறைந்த நிகழ்வுகளைத் தொகுத்து 8 அத்தியாயங்களாக உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். ப்ரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தொடரான, சுழல் – தி வோர்டெக்ஸ் என்ற தமிழ்த் தொடர், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும், ஃப்ரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது. லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கியம், சீனம், செக், டேனிஷ், டச்சு, பிலிப்பைன்ஸ், ஃபின்னிஷ், கிரேக்கம், ஹீப்ரு, ஹங்கேரியன், இந்தோனேஷியன், கொரியன், மலாய், நார்வேஜியன் போக்ம், ருமேனியன், ரஷியன், ஸ்வீடிஷ், தாய்,உக்ரேனியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல வெளிநாட்டு மொழிகளிலும் இந்தத் தொடர் சப்டைட்டில்களுடன் கிடைக்கும். இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் ஜூன் 17 முதல் சுழல் – தி வோர்டெக்ஸைப் பார்க்கலாம்.