வணக்கம்,
அமுக்கிரான் பழம், நல்ல சிறுநீர் பெருக்கியாகவும், தூக்கமின்மையை போக்கவும் உபயோகபடுத்த படுகிறது. இந்த அமுக்கிரான் பழத்தை வைத்து, சுவையான குழம்பு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். வைரல் காய்ச்சல் வந்த பிறகு, உடம்பெல்லாம் சத்தே இல்லாம், மூட்டெல்லாம் வலிக்கும். இந்த காய் குழம்பு வச்சு குடுப்பாங்க. சீக்கிரம் சரியாகிடும்.
தேவையான பொருட்கள்:
அமுக்கிரான் காய் – 1 கப்
சின்ன வெங்காயம் – 1 கப்
பூண்டு – 1 கட்டி
கறிமசாலா தூள் (கொத்துமல்லி தூள்) – 1 1/2 கரண்டி
தக்காளி – 1
கரிவேப்பிலை – கைப்பிடி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய்- 2 ஸ்பூன் + 1 ஸ்பூன்
செய்முறை:
Step 1:
பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். வதக்கிய பின், ஆற விடவும். அமுக்கிரான் பழத்தை எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.
Step 2:
மிக்சியில், அமுக்கிரான் பழத்தை போட்டு அரைக்கவும். பின்பு, அதனுள் கறிமசாலா தூள், மஞ்சள் தூள், வதக்கிய வெங்காயம், பூண்டு போட்டு நன்கு அரைக்கவும்.
Step 3:
பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு பொரிந்ததும், தக்காளி, கரிவேப்பிலை, போட்டு நன்கு வதக்கவும்.
Step 4:
அரைத்த விழுதை சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு, கொதிக்க விடவும். நன்கு கொதிக்க விட்டு, குழம்பு பதத்தில் இறக்கவும்.
அரிசி சாதம், தோசை, இட்லி, பணியாரத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- வசந்தி ராஜசேகரன்.