32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இந்தநாள் நல்லநாள்

Dinesh R சேலம் Published: 01/12/2009 1 நிமிட வாசிப்பு Updated: 30/01/2014 கவிதை
எழுத்து அளவு:

குறுக்கே போனது பூனை
எதிரே வந்தால் விதவை
புறப்பட்டது ராகுகாலம்
எமகண்டம் வருவதற்குள்
சீக்கிரம் போய்சேரவேண்டும்
கீழ்நோக்கு நாள்
போகின்ற காரியம்
இன்று உருபட்டமாதிரிதான்

மாலை திரும்பிவந்தார்
சாலையில் அந்த பூனை
விபத்தில் நசுங்கிக் கிடந்தது
விதவை அவள் வீட்டினெதிரே
அழுதுகொண்டிருந்தாள்
திருடப்பட்ட தன் சேமிப்பினையெண்ணி

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

யார் ராசிகெட்டவர்!
யார் தரித்திரம் பிடித்தவர்?

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.