32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மாமனிதர்

Dinesh R சேலம் Published: 12/12/2009 1 நிமிட வாசிப்பு Updated: 30/01/2014 கவிதை
எழுத்து அளவு:

நாதியற்று நின்றுகொண்டிருக்கும்
அவரை யாரும் கண்டுகொள்ளவதில்லை
வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள
பிறந்தநாள், நினைவுநாள் தவிர
தினமும் நாங்கள் சென்று அன்பை பொழிகிறோம்
எச்சங்களாய்
இறந்தபிறகும் எங்களை சுமந்துகொண்டு
உலகத்தை உயரமான இடத்திலிருந்து
பார்த்து புரிந்துகொள்ள சொன்னார்
காய்ந்துபோய் அவர்கழுத்தில்
கிடக்கும் பூமாலை மூலம்

– சே.ராஜப்ரியன்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.