32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இயல்பிழந்த நிலை

Dinesh R சேலம் Published: 02/06/2010 1 நிமிட வாசிப்பு Updated: 27/01/2014 கவிதை
எழுத்து அளவு:

இயல்பிழந்த நிலையில்
இருக்கிறேன்
உன்னோடு
என்னை சேர்த்த காதலால்

இயல்பிழந்த நிலையில்
இருக்கிறேன்
நடிக்க வேண்டிதானிருக்கிறது
அம்மாவின் பாசத்திலிருந்து
நண்பர்களின் ஆறுதலிருந்து
மற்றவர்களின் அனுதாபத்திலிருந்து
அவளின் ஏளன பார்வையிலிருந்து
மறைவாய் அழுதுதீர்த்த கண்ணீரிலிருந்து
நம்பிக்கை துரோகிகளின் போலிசிரிப்பிலிருந்து
ஊருக்கு பேசிவிட்டு உண்மையில் நடக்காத
உபதேசவான்களின் அறிவுரையிலிருந்து
தப்பிக்க

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எப்பொழுதும் போலவே
சிரிக்கிறேன்
பேசுகிறேன்
எல்லாமும் செய்கிறேன்
கண்களை வற்ற செய்து

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க