32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

உண்ணாவிரதம் – உன் நா விரதம்

Dinesh R சேலம் Published: 26/02/2013 1 நிமிட வாசிப்பு Updated: 25/01/2014 கவிதை
எழுத்து அளவு:

அரசியல் வாணியமாக்கிய விடாணி
உருவலும் உறுவலால் உருகியது
வரி வாரியம் வறமிளைக்கவோ
மோறையும் வாறு இழந்தது

வேண்டியன பலவும் பட்டியலில்
உணவுமில்லா பெரும் பந்தலில்
தொண்டர்கள் யாவரும் பட்டினியில்
நீயோ பொருளீட்டும் இச்சையினால்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

உண்ணாதிருக்கும் சில தினம்
மருத்துவமோ தானோ அனுதினம்
விவசாயி வாழ்வுமோர் புதினம்
பொதுமக்கள் மடிவதோ தினம்தினம்

உன் நாவது உண்ணா நாளதுவோ
புகழாரத் தேடலின் ஓர் நாளதுவோ
உன் நாவது உண்ணா நாளேதுவோ
மக்கள் உண்ண போராடும் நாளதுவோ

– சிந்தியா ரகுநாதன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க