Shadow

இயற்கை அன்னை

mother nature new

 

விரி கடலும் தொடு வானமும்,
வானில் தவழும் வண்ண மேகமும்,
மேகத்தினூடே மின்னும் சூரிய, சந்திர விண்மீன்களும் தந்தாள்!

பச்சை கம்பள புல்வெளிகளும்,
பனிமூடிய மலை முகடுகளும்,
மலை முகட்டினின்று பொன் வெள்ளி தகடென வழியும் அருவிகளும் தந்தாள்!

கனிம வளங்களும்,
அடர் கானகமும் தந்து,
உயிர்க்கு அமிர்தமாம் மழையும் மாநதிகளும் தந்தாள்!

பசிப்பிணி போக்கும் அருங்கனிகளும்,
இன்ன பிறவும் தந்தாள்

வனப்பு மிகு வண்ண மலர்களும் தந்து கூறினால் இயற்கை அன்னை என் செவியில்,
மானுடனே இவையாவும் உனக்கு மட்டும் உரியதன்று,
உன்னுடன் புவியில் வாழ்ந்துக் கொண்டிருக்கும்,
இனி வாழப்போகும் அணைத்து உயிர்களுக்கும் என்று!

(நோ.. நோ.. எனக்கு கவிதைலாம் எழுத வராது. நம்புங்க. இது என் மனைவியின் அம்மா எழுதியது)

இரகுராமன்

Leave a Reply