32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

எது சமுதாயப் பிணி?

Dinesh R சேலம் Published: 01/08/2015 2 நிமிட வாசிப்பு Updated: 20/04/2016 சினிமா
எழுத்து அளவு:

மோர்ணா அனிதா ரெட்டி

மோர்ணா அனிதா ரெட்டி சர்வதேச விளம்பரத் துறையில் மட்டுமின்றி தியேட்டர் நாடகங்களிலும் மிகவும் பிரசித்திப் பெற்றவர். இவர் தற்போது ‘உனக்கென்ன வேணும் சொல்லு ‘ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறிய படம் என்ற போதிலும் படமாக்கப்பட்ட விதத்திலும், கதை அமைப்பினாலும் எல்லோரையும் கவரும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ இந்த மாதம் இறுதியல் உலகெங்கும் வெளி வர உள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘என்னுடைய கதாபாத்திரம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய கதாபாத்திரம் இல்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் பாத்திரம் தான் என்றாலும், இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை என்னிடம் விவரிக்கும் போது அந்தப் பாத்திரத்தின் வீரியத்தைப் புரிந்து கொண்ட நான் அந்த வேடத்தில் நடிக்கப் போவது யாரென்று அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். கதையைச் சொல்லி முடித்ததும் தீர்மானமாகச் சொன்னார் ‘ நீ தான் என்று’.

சற்றே தயங்கினாலும் அவர் எனக்கு ஊட்டிய தன்னிம்பிக்கை காரணமாக அந்த வேடத்தை ஏற்றுக் கொண்டு நடித்தேன். படப்பிடிப்பு முடிந்து, படம் பார்த்த பின்னர் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணமாகி குழந்தை பேறு இல்லாமல் தவிக்கும் சமுதாயத்தின் மேல் தட்டில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் பாத்திரத்தில் நடிக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு சமுதாயத்தில் பேறு இல்லாததால் அவளுக்கு நடக்கும் அவமானங்களும் அதன்
தொடர்ச்சியாக அவளுடைய செய்கையும் அந்த செய்கையின் வாயிலாக அவள் ஒரு அமானுஷ்ய சக்திக்கு உயிர் கொடுத்து இருப்பதும் தான் படத்தின் மையக்கரு.

சமுதாயத்தில தாய் இல்லா பிள்ளைக்குக் கிடைக்கும் அரவணைப்பு, பிள்ளை இல்லா தாய்க்குக் கிட்டுவதில்லை. இந்தப் பிரச்சினையை நான் சமுதாயப் பிணி என்பேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிக நடிகையர், இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம், தயாரிப்பாளர் ஷான், மற்றும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி இருக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனத்தார்க்கும் என் மனமார்ந்த நன்றி” எனக் கூறினார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.