32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ரெமோவுடன் இணையும் ராஜா

Dinesh R சேலம் Published: 11/03/2016 1 நிமிட வாசிப்பு Updated: 27/09/2016 சினிமா
எழுத்து அளவு:

இன்னும் ரஜினிமுருகன் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தனது அடுத்த படத்திலும் அந்த இமேஜைத் தக்க வைக்க அவ்வெற்றி கூடுதல் பொறுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் ‘ரெமோ’ என தனது அடுத்த படத்தின் தலைப்பை ஈர்ப்பாக வைத்து விட்டு, படப்பிடிப்பிலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

“இந்த வருட, பருவ மழையின் தொடக்கத்தின் பொழுதே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பிட்ட நேரத்தில், படத்தை முடிக்கும் முனைப்புடன் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், தனது இளம் குழு ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றி வருகிறார்” என மகிழ்ச்சியாகச் சொன்னார் 24 ஏஎம் ஸ்டுடியோஸின் நிறுவனர் ஆர்.டி.ராஜா.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ரெமோ குழுவினர், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு விசாகப்பட்டினம் கிளம்ப ஆயுத்தமாக உள்ள சூழலில், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தனது அடுத்த தயாரிப்பை இன்று பூஜையுடன் தொடங்கினர்.

24AM STUDIOS

“நன்றாகத் தொடங்கப்படும் வேலை நன்றாக முடிந்ததற்குச் சமம் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். எங்கள் நிறுவனத்தின் பலமே இந்த நம்பிக்கைத்தான். அந்த நம்பிக்கையோடு, எங்களது அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயனோடு இணைவதோடு இயக்குநர் மோகன் ராஜாவைக் கூட்டுச் சேர்த்துள்ளோம். இவ்விருவர் கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவதோடு, அதை உண்மையாக்கும் வகையில் அவர்கள் நெஞ்சத்திலிருந்து நீங்கா வண்ணமொரு சுவாரசியமான படத்தைக் கண்டிப்பாகத் தருவார்கள்” என்றார் மிகுந்த நம்பிக்கையுடன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.