32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

விழித்திரு நாயகன் ராகுல் பாஸ்கரன்

Dinesh R சேலம் Published: 30/10/2017 2 நிமிட வாசிப்பு Updated: 01/11/2017 சினிமா
எழுத்து அளவு:

Rahul Baskaran

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விழித்திரு’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இது ஒரு ஆன்த்தாலஜி (Anthology) படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் பல உயரங்களைத் தொடத் திறமையுள்ளவர். மத்திய அரசின் ஊழியரான இவரது தந்தையின் ட்ரான்ஸ்ஃபர் நிறைந்த வேலையால், இந்தியா முழுவதும் பயணம் செய்து வாழ்ந்தவர். ராகுல் பாஸ்கரின் அர்ப்பணிப்பைப் பார்த்து மீரா கதிரவனும் பாராட்டும் விதமாகத் தட்டிக் கொடுத்துள்ளார்.

விழித்திரு படத்தில் தானேற்ற கதாபாத்திரம் குறித்து நடிகர் ராகுல் பாஸ்கரன் பேசுகையில், ”இப்படத்தில் பிரபல மாடலான எரிக்கா பெர்னாண்டஸுடன் ஜோடியாக நடித்துள்ளேன். பணக்கஷ்டம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூடத் தெரியாத ஒரு பெரிய கோடிஸ்வரரின் மகனாக இப்படத்தில் நடித்துள்ளேன். பல கதைகள் ஒன்று சேரும் இப்படத்தில் எனது கதையும் சிறப்பாக வந்துள்ளது. தமிழ்நாட்டில் பிறந்து இந்திய முழுவதும் வாழ்ந்துள்ளதால் எனக்குத் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளுமே சரளமாக வரும். இப்படத்தில் எரிக்கா தமிழ் வசனங்களைக் கற்றுக் கொள்ள நான் உதவி செய்தது எனது மொழியாற்றலையும் மேன்படுத்திக் கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. சினிமாவில் எனது முன்மாதிரி விஜய் சேதுபதி அண்ணா தான். கீழிருந்து போராடிப் பெற்ற அவரது வளர்ச்சியைப் போல் என் வளர்ச்சியும் இருக்கு வேண்டுமென ஆசைப்படுகிறேன். இயக்குநர் மீரா கதிரவன் அவர்களுக்கு என்றுமே நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரது மனவலிமைக்கு ஒரு பெரிய சன்மானம் கிடைக்கும். ரிலீசுக்கு முன்பு ‘விழித்திரு’ படத்தைப் பார்த்தவர்கள் தந்த பாராட்டுக்கள் ரிலீசுக்குப் பிறகும் தமிழ் சினிமா ரசிகர்களிடமிருந்தும் வரும் என நம்புகிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.