32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வருத்தத்துடன் ஒரு கடிதம் – நிவேதா பெத்துராஜ்

Dinesh R சேலம் Published: 07/05/2018 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Nivetha Pethuraj

‘ஒரு நாள் கூத்து’ படத்தில் தினேஷிற்கு ஜோடியாக நடித்திருந்த நிவேதா பெத்துராஜ் தன் நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். நன்றாகத் தமிழ் பேசக் கூடிய நாயகி என்பது அவரைப் பற்றிய கூடுதல் சிறப்பம்சம். சமீபமாக ஒரு சில ஊடங்கங்களில் வேறு ஒரு நடிகையின் மிகக் கவர்ச்சிகரமான படங்களை, நிவேதா பெத்துராஜுவின் பெயர் போட்டுப் பிரசுரித்ததால் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகைப்படங்களை வெளியிட்டு, அது நான் தான் என்று பொய்ப் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதைப் பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்தச் செயலை வெறும் கவனக்குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரைக் கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நான் சட்ட ஆலோசனை செய்து, தொடர்ந்து இவ்வாறு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன். ஊடகங்களின் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன். ஆயினும் இந்தப் பிரச்சினை தொடருகிறது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. எங்களைச் சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு. இத்தகைய பொய்ச் செய்திகள் எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பைத் தருகிறது. இந்தக் கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இவ்வாறு நிகழுமானால் சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு என்று எனது சட்ட ஆலோசகர் கூறுவதை நான் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை” என்று கூறினார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.