32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

‘கடலைப் போட பொண்ணு வேணுமா?’ – யோகிபாபு

Dinesh R சேலம் Published: 30/05/2019 1 நிமிட வாசிப்பு Updated: 19/06/2019 சினிமா
எழுத்து அளவு:

KPPV---Yogi-Babu

R.G.மீடியா சார்பாக D.ராபின்சன் தயாரித்துள்ள “கடல போட ஒரு பொண்ணு வேணும்” எனும் படம். இப்படத்தை வேகமாக எடுத்து முடித்துள்ள இயக்குநர் ஆனந்த்ராஜன் படத்தைப் பற்றிக் கூறும்போது, “யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப் படம் காட்டும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவரும் பெண்கள். அந்தப் பெண்களை அவர் கடலைப் போட்டு உஷார் பண்ணுவார். கடலைப்போட்டு கடலைப்போட்டு பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம் கடலைப்போட பெண் தேடும் ஹீரோ அசார் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் இடங்களில் எல்லாம் சிரிப்பால் நம் வயிறு பிதுங்கும். முழுக்க முழுக்க மக்களை ஜாலியாக எண்டெர்டெயின்மெண்ட் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிற படம் இது. நிச்சயம் இந்தப் படம் கமர்ஷியலாக பெரிய வெற்றி பெறும். அதற்கான எல்லாச் சாத்தியங்களையும் படத்தில் கையாண்டிருக்கிறோம்” என்றார் இயக்குநர் ஆனந்த்ராஜன். இவர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

படத்தில் யோகிபாபு பெரிய பில்லர் என்றால், ஹீரோ அசார் பெரிய எனர்ஜி. சின்னத்திரை மூலமாக மக்களை மகிழ்வித்த அசாருக்கு இப்படம் பெரிய திரையில் நல்லதொரு பெயரை ஈட்டித் தரும். மேலும் படத்தில் சாஜித், மன்சூர் அலிகான், செந்தில், சுவாமிநாதன், தீனா, மனோகர், காஜல், மற்றும் பலர் நடித்துள்ளனர். இனியன் J.ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜீபின் இசையமைத்துள்ளார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.