32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஸ்பைடர் மேனும், மிஸ்டிரியோவும்

Dinesh R சேலம் Published: 23/06/2019 2 நிமிட வாசிப்பு Updated: 20/07/2019 அயல் சினிமா
எழுத்து அளவு:

Spider-Man-Mysterio

2017 இல், புத்தம் புது ஸ்பைடர் மேனுக்கான விதையை ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் படத்தில் போட்டிருப்பார்கள். அதிகமாய் வசூல் செய்த ஸ்பைடர் மேன் படங்களில் இரண்டாவது என்ற புகழையும், அவ்வருடம் வசூல் சாதனை புரிந்த படங்களில் ஆறாவது இடத்தைப் பெற்ற சிறப்பும் அப்படத்திற்கு உண்டு. அதன் தொடர்ச்சியே ஜூலை 5 வரவிருக்கும் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம். நியூ யார்கின் விண்ணை முட்டும் கட்டங்களின் ஊடே மட்டும் பறந்து பறந்து, நியூ-யார்க்கைக் காப்பாற்றி வந்த ஸ்பைடர் மேன், முதன்முறையாக ஐரோப்பாவிற்குப் பயணித்து, உலகைக் காப்பாற்றும் சாகசத்தில் ஈடுபட இருப்பது தான் இப்படத்தின் சிறப்பம்சம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஸ்பைடர் மேனாக அறிமுகமான டாம் ஹாலண்ட், ஹோம் கமிங் படத்தில், அவெஞ்சர்ஸ் குழுவில் சேருவதைத் தன் வாழ்வின் மிக முக்கிய லட்சியமாகக் கொண்டிருப்பார். இம்முறை ஜாலியாகச் சுற்றுலா போகும் பள்ளி மாணவனான பீட்டர் பார்க்கர், இத்தாலியின் வெனிஸ், நெதர்லேண்ட்ஸ், ஆல்ப்ஸ், பெர்லின், ப்ரேக் எனச் சுற்றி லண்டனுக்கு வந்து சேருகிறார். உலகைக் காக்க வேண்டிய அதி முக்கிய வேலையை, நிக் ஃப்யூரியான சாம்யூல் ஜாக்ஸன் ஸ்பைடர் மேனிடம் ஒப்படைக்கிறார். மிஸ்டிரியோ எனும் வேற்றுக்கிரகத்து சூப்பர் ஹீரோவுடன் இணைந்து, உலகை அழிக்கத் துடிக்கும் ஒரு வினோத ஜந்துவை எதிர்கொள்கிறார் ஸ்பைடர் மேன். மிஸ்டிரியோவாக ஜேக் க்லைன்ஹால் நடித்துள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங் படத்தை இயக்கிய ஜான் வாட்ஸ் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். 3டி மற்றும் ஐ-மேக்ஸ் ஃபார்மட்களிலும் இப்படம் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.