32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

த்ரிஷாவின் கர்ஜனை

Dinesh R சேலம் Published: 09/07/2019 2 நிமிட வாசிப்பு Updated: 11/07/2019 சினிமா
எழுத்து அளவு:

Trisha-in-Garjanai

த்ரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாகத் தயாராகி உள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

செஞ்சூரி இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசையமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் கலை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

கர்ஜனை படத்தில் திரிஷாவோடு வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, தவசி, அமித்பார்கவ், சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா உள்பட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படம் பற்றி, “செய்யாத தவறுக்கான பழி நம்மீது விழுந்தால் நமக்குக் கோபம் வருமல்லவா. அந்தக் கோபம் தான் கர்ஜனை. செய்யாத தவறிற்காக திரிஷாவின் காதலர் மேல் பழி வர, அவர் ஒரு பிரச்சனையில் மாட்டுகிறார். அதில் இருந்து அவரை மீட்டு வரப்போராடும் த்ரிஷா அந்தப் பிரச்சனையில் ஒரு இழப்பைச் சந்திக்கிறார். பின் கர்ஜித்து அவர் வில்லன் கூட்டத்தை பழிக்குப்பழி வாங்குவது தான் படத்தின் சாராம்சம். பெரிய ஹீரோக்கள் பெரிய இயக்குநர்கள் படங்களில் நடித்து வரும் த்ரிஷா என் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததிற்குக் காரணம் படத்தின் கதைதான். செய்யாத தவற்றால் ஒரு இழப்பைச் சந்திக்கும் அவர் பழிக்குப்பழி வாங்குவதிலும் ஒரு நியாயம் இருக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நினைத்தே த்ரிஷா நடித்துள்ளார். நிச்சயம் திரிஷா கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்” எத்ன்றார் இயக்குநர் சுந்தர் பாலு.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.