32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இசை தான் என் ஜீவன் – அஜீஸ்

Dinesh R சேலம் Published: 29/08/2019 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

 Music-director-Ajeesh

7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசையமைப்பாளராகத் தனது தடத்தை அழுத்தமாகப் பதித்துள்ளார் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

2009 சூப்பர் சிங்கர் சீசன் 2 இல் குரலால் வசீகரித்தவர். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்பொழுதே பிரபலம். கோவா படத்தில் இவர் பாடிய, ‘இதுவரை’ பாடல் மிகவும் பிரபலம். பாபி சிம்ஹா நடித்த பாம்புசட்டை படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாக இருக்கின்ற சர்பத் படத்தில் ஐந்து பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். வெளியாகும் முன்பே சர்பத் படத்தின் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டுள்ள அஜீஸ், “இசை தான் என் ஜீவன்” என்கிறார். மேலும் ஒரு வெப்சீரிஸுக்கும் இசையமைத்து வரும் அஜீஸ் சர்பத் படத்தின் இசை வெளியீட்டுக்குப் பிறகு மிகப் பிரபலமான இசையமைப்பாளாராக அடையாளம் காணப்படக்கூடும்.

படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 5 பாடல்களில் ஒரு பாடல் திருவிழா பாடலாம். ஒரு ஃப்ரெண்ட்ஷிப் பாடல் இரண்டு மெலடி பாடல் என வெரைட்டியாக பாடல்கள் கம்போஸ் பண்ணி வைத்திருப்பதாகச் சொல்லும் அஜீஸ், படத்தின் கதையும் கதைக்கு ஏற்ற பின்னணி இசையும் சிறப்பாக வந்துள்ளதாக மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்.

அஜீஸுக்குப் பள்ளிப் படிப்பின் போதே இசை மீது தீராக்காதல் இருந்ததாம். இண்டிபெண்டண்ட் இசையில் பெரிய நாட்டத்தோடு இருந்துள்ள இவர் பல்வேறு குறும்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இசை ஆல்பங்களாலும் ரசிகர்களைச் சேர்த்து வைத்துள்ளார். இனி பல படங்களில் அஜீஸுன் இசைப் பயணம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.