32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கும் ‘மான் வேட்டை’ இயக்குநர் திருமலை” – ரவி மரியா

Dinesh R சேலம் Published: 16/12/2022 2 நிமிட வாசிப்பு Updated: 19/12/2022 இது புதிது
எழுத்து அளவு:

அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள் புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் “மான் வேட்டை” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர் M.திருமலை இப்படத்தினைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 14 ஆம் தேதி அன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தயாரிப்பாளர் PL தேனப்பன், “படங்களில் சின்ன படம், பெரிய படம் என்று ஒன்னும் இல்லை. படம் வெளியான பிறகு தான் அது முடிவாகும். படத்தின் தலைப்பு சிறப்பாக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்” என்றார்.

அம்மா க்ரியேஷன்ஸ் T.சிவா, “எல்லா விஷயங்களும் தோள் கொடுப்பவர் திருமலை. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும். இந்தப் படம் சிறப்பாக உருவாகி இருகிறது. இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் ரவி மரியா, “நண்பர் திருமலைக்காக மட்டுமே இந்த விழாவிற்காக வந்தேன். இந்தப் படம் வெற்றிப்பட வரிசையில் இணைய வேண்டும். திருமலை, எல்லாப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க கூடிய நல்ல மனிதர். நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும். சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். அந்த வரிசையில் இந்த மான்வேட்டை படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்.

தொழில்நுட்பக் குழு:

>> எழுத்து இயக்கம் – M.திருமலை
>> இசை – ஶ்ரீகாந்த் தேவா
>> ஒளிப்பதிவு – விஜய் வில்சன்
>> வசனம் – வேலு சுப்பிரமணியம்
>> படத்தொகுப்பு – சுதா, லக்ஷ்மணன்
>> பாடல் – விவேகா , சொற்கோ கருணாநிதி, ஏக்நாத்
>> மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.