32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அகத்தியா | ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில் – சாகச உலகம்

Dinesh R சேலம் Published: 24/12/2024 2 நிமிட வாசிப்பு Updated: 07/01/2025 இது புதிது
எழுத்து அளவு:

டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் “அகத்தியா”வாகும்.

‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ என்ற ஈர்ப்பான கதைக்கருவுடன், அதிநவீன CGI-உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில் த்ரில்லர் பாணியில், ஒரு புதுமையான உலகம் படைக்கப்பட்டிருக்கும் “அகத்தியா” படத்தினைப் புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவைத் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது. நான்கு மொழிகளில் அற்புதமான சிம்பொனி இசையுடன் வரும் டைட்டில், அதிரடி ஆக்சன் நிரம்பிய ஒரு மர்மமான புதிய உலகிற்கு உட்திரவாதமளிக்கிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், “திகில் த்ரில்லர் ஜானர் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. ‘அகத்தியா’ மூலம் இந்த அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம். பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன், மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு சாகச உலகைப் பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். ‘அகத்தியா’ கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்” என்றார்.

அடுத்த ஆண்டு (2025), ஜனவரி 31 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சார பின்னணி ஆகியவற்றின் அட்டகாச கலவையின் மூலம், இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் என அகத்தியா படக்குழுவினர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.