32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியர்கள்

Dinesh R சேலம் Published: 26/05/2010 1 நிமிட வாசிப்பு Updated: 27/01/2014 கவிதை
எழுத்து அளவு:

டிக்காஷன் ஊற்றாத தேநீர் கோப்பையும் மணக்குது
கறுத்துப்போன காபிக் கொட்டைகளும் இனிக்குது
சர்க்கரை கட்டியே கொஞ்சம் என்னிடம் பேச்சு
சூப்பர் வைசர் வயிறு எரியட்டும்
அதில் பால் காய்ச்சுவோம்

வெண்டைக்காய் பச்சடியில் ஒழிந்திருக்கும் வெங்காயம் போல
சுண்டைக்காய் கிச்சடியில் கலந்திருக்கும் வெந்தயம் போல
வாழக்காய் பொறியலில் வெந்திருக்கும் கடலைப் போல
வாழ்வோம் சைடிஷ்ஷிக்கு நான் கேரண்டி

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மைதாவின் வழுவழுப்பில்
அடுப்புக்கல்லின் கதகதப்பின்
ஆயிரம் பரோட்டாக்கள்
குருமாவுக்காக பிறந்திருக்கலாம்
ஆனால் இந்த ப்ரோட்ட மாஸ்டர்
உனக்காக பிறந்தவன்

அரிசி மாவில் கலந்த வெள்ளை உளுந்தே
சாம்பாரில் விழுந்த கொத்த மல்லிக் கொழுந்தே
எண்ணெய்யில் பொறிந்த துவரம் பருப்பே
என்னையும் பொறித்ததடி உந்தன் சிரிப்பே

பஞ்சாப் கோதுமையும்
பண்ரொட்டி நெய்யும்
சேர்ந்து செஞ்சது இந்த
மைசூர் பாக்கு ருசித்துப்பாரடி
என் பர்மா தேக்கு

அம்மி மிதித்து
அரிசி செத்து
வட்டவட்டமாய் இட்லிகள் கைவசம்
வாங்கிக்கோடி சட்டினி இலவசம்

காரச் சட்டினிக்கு கூட கண் கலங்காதவன்
என்னை உன் மௌனத்தால் கதரடிக்காதே!
புதினாச் சட்டினிக்கு கூட மூக்கடைக்காதவன்
என்னை உன் பிரிவால் பீளிங்க்ஸாக்காதே
பழையச் சட்டினிக்கு கூட பட்டினியிருக்காத
என்னை உன் அலசியத்தால் அல்சரக்காதே

கூடுடைந்த முட்டைப் போல
குழம்பியிருந்தேன்
கல்லாவில் விழுந்த துட்டைப் போல
கலையாய் சிரித்தேன்
ஆம்லைட் தின்னதற்கு பைசா கூட வேண்டாம்
ஆம் என்று லைட்டாக சொல்லிவிட்டுப் போ
கோழி போல அடை காக்கிறேன் உனக்காக

– நீச்சல்காரன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க