32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மணிகொண்டா அரண்மனை

Dinesh R சேலம் Published: 14/05/2014 1 நிமிட வாசிப்பு Updated: 17/05/2014 சினிமா
எழுத்து அளவு:

Aranmanai அர்ண்மனை

20 கோடி ரூபாய் பொருட்செலவில் “விஷன் ஐ மீடியாஸ்” நிறுவனம் சார்பில் D.தினேஷ் கார்த்திக், தயாரிக்கும் அரண்மனை படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சந்தானம், ஹன்சிகா மோத்வாணி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், வினய், சரவணன், கோவை சரளா, மனோபாலா, ‘காதல்’ தண்டபாணி, கோட்டா சீனிவாச ராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா என 21 நட்சத்திரப் பட்டாளங்களுடன் இயக்குநர் சுந்தர்.சியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்கியுள்ளார்.

3 கோடி ரூபாய் செலவில், ஹைதராபாத்தில் உள்ள மணிகொண்டா எனும் இடத்தில் ஒரு அரண்மனையையே கலை இயக்குநர் குருராஜ் உருவாக்கியுள்ளார். மிகப் பிரம்மாண்டமான இந்த அரண்மனையை 400 ஊழியர்கள் 3 மாத காலம் இரவு பகலாக உழைத்து உருவாக்கியுள்ளனர்.

மூன்று கதாநாயகிகளும் நடிப்பிலும் பாடல் காட்சிகளிலும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். காட்சிக்குக் காட்சி சந்தானம் காமெடியில் மிரட்டியிருக்கிறார். கோவை சரளா, மனோபாலா முதன்முறையாக ஜோடி சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பை ஒளிப்பதிவாளர் U.K. செந்தில்குமார் அனைத்து தொழில்நுட்பக் கருவிகளையும் பயன்படுத்தி படம்பிடித்துள்ளார். படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளையும் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கியுள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

“அரண்மனை” – ஸ்டில்ஸ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.