32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அரசியலைக் கலாய்க்க வரும் பவர் ஸ்டார்

Dinesh R சேலம் Published: 10/12/2014 1 நிமிட வாசிப்பு Updated: 12/12/2014 சினிமா
எழுத்து அளவு:

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

அரசியல்வாதிகளின் உண்ணாவிரதம் முதல் கண்டன அறிக்கைவரை எல்லாத்தையும், ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்டா!’ எனக் கடந்து செல்லும் மனநிலையை மக்கள் எப்பவோ பெற்றுவிட்டனர். ஆனால், சூரியன் படத்தில் மகான் கவுண்டர் (சமூகத்தளம் கவுண்டமணிக்குச் சூட்டியுள்ள கெளரவப்பட்டம்), “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என பகடி செய்ததற்கு பின், பரவலாக இது பேச்சு வழக்குத் தொடராக மாறியது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தற்போதைய அரசியல் நடப்புகளை மையமாக வைத்து, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற தலைப்பில் படம் எடுத்து வருகின்றனர். டிசம்பர் 11, கொடைக்கானலில் இப்படத்திற்கான படப்பிடிப்புத் தொடங்கியது. பவர் ஸ்டார், ஜான் விஜய், மனோ பாலா, சுப்பு அருணாசலம் முதலியோர் நடிக்கின்றனர். தற்காப்பு, கரையோரம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த கணேஷ் பிரசாத்தான் படத்தின் நாயகன்.

‘இந்தப் படம் உண்மையை, நகைச்சுவையுடன் உரக்கச் சொல்லும் படமாகும்’ என்கிறார் பல்வேறு வெற்றிப் படங்களுக்கு கதை அமைப்பாளராகப் பணியாற்றிய இயக்குநர் சக்தி அஜய் குமார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.