32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சிம்ஹா இன் கோ-2

Dinesh R சேலம் Published: 12/04/2015 1 நிமிட வாசிப்பு Updated: 03/05/2016 சினிமா
எழுத்து அளவு:

கோ - 2

“எங்கள் நிறுவனத்தினுடைய ‘கோ’படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. விஷ்ணுவர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குநராய் பணி புரிந்துள்ள சரத் அவர்களின் கதையைக் கேட்க நேர்ந்தது. கதையைக் கேட்டு முடிக்கும் முன்னரே, இப்படத்தை எங்கள் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு படத்தின் ‘Sequel’ என்றால் அதே குழு, மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றல்லாமல் அந்தக் கதை அந்தத் தலைப்புக்கு ஏற்றவாறு உள்ளது என்று யோசித்தோம். அதன் விளைவே ‘கோ-2’ விரைவில் தயாராகவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அந்தக் கதாப்பாத்திரத்தின் வலிமைக்கு தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா கனக் கச்சிதமாய்ப் பொருந்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி. மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பு கண்டிப்பாய் அனைவரது எதிர்பார்ப்பிற்கும் வித்தாய் அமையும் என்று நம்புகிறோம். ‘கோ’ திரைப்படத்திற்கு அளித்த ஆதரவிற்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார் RS இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.