32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வீரவன் ஸ்டாலின் திறந்திடும் சீசே

Dinesh R சேலம் Published: 16/04/2015 1 நிமிட வாசிப்பு Updated: 21/05/2015 சினிமா
எழுத்து அளவு:

வீரவன் ஸ்டாலின்

ஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வபோதுதான் வெளி வரும். அந்த தருணம் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் காட்சி படுத்துகிறது ‘திறந்திடு சீசே‘ திரைப்படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் ‘திறந்திடு சீசே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் நிமேஷ்வர்ஷன். இவர் இயக்குநர் ஷங்கரின் இணை இயக்குநராவார்.

‘வீரவன் ஸ்டாலின் இப்படத்தை தயாரிப்பதோடு கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவ்வளவு துணிவான ஒரு கதையை தயாரிக்க முன் வந்ததோடு, மற்றவர் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்த வகையில் அவருக்கு என் நன்றி.

தன்ஷிகா ஒரு திறமையான நடிகை என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயம் இருக்கப் போவதில்லை. அதையும் மிஞ்சிய ஒரு நடிப்பை இந்தப் படத்தில் அவர் வழங்கி உள்ளார். சி.எஸ்.கே. புகழ் நாராயண், இந்தப் படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்சனா கீர்த்தி அறிமுகமாக , குளஞ்சி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, விஜய் படத்தொகுப்பில், மோகன்ராஜன் வரிகளில் கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளர்.

எல்லா இளைஞர்களுக்கும் பிடிக்கிற வகையில் நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக எடுத்துள்ளோம். மனிதன் அவன் இயல்பு நிலையில் இருந்து தவறும்போது ஏற்படும் நிகழ்வுகளைக் கூறியுள்ளோம்” என்றார் இளம் இயக்குநர் நிமேஷ் வர்ஷன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.