Shadow

உலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்

tptk-curtain-raiser

டூ மூவி பஃப் எனும் நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம். இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 27 அன்று வெளியிடுகிறது.

இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர், “கிரிக்கெட் உலகக் கோப்பையைத் திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான். அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவத்தைப் பார்க்கிறேன் என்றால், இதில் எல்லாக் காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்.

பொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, காதல் காட்சியோ தான் பொதுவாக இருக்கும். நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்தப் படத்தில் காட்சிக்குக் காட்சி புதுமை இருக்கும். ஒரு காட்சியையும் வேறு எந்தப் படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில் இருக்கும்.

கலை இயக்கத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். எங்கள் கலை இயக்குநர் மிகச் சிறப்பாக தன் பங்கை அளித்துள்ளார். மியூசியம் செட் ஒன்று படத்தில் உள்ளது. அது செட் என்றே தெரியாத வகையில் அத்தனை வெண்கல சிற்பங்களைக் கொண்டு துல்லியமாக வடிவமைத்துள்ளார். படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்” என்றார்.