Shadow

பிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி

bigg-boss-3-day-81

லாஸ்லியாவின் குடும்பத்தை, “நீங்க கிளம்பலாம்” எனச் சொல்லிவிட்டார் பிக் பாஸ். அவர்களும் பிரியாவிடையுடன் கிளம்பிச் சென்றனர்.

கவின் – லாஸ், இருவரும் தனியாக உட்கார்ந்து பேசினார்கள். மன்னிக்க, கவின் பேசவே இல்லை. ‘நலந்தானா?’ மோட்ல கண்ணாலேயே பேசிக் கொண்டிருந்தார். ‘இப்ப என்ன நடந்து போச்சு?’ என இப்படி சீக்கு வந்த கோழி மாதிரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். இத்தனை நாளாகப் பக்கம் பக்கமா பாயின்ட், பாயின்டா பேசினவருக்கு, இப்போ பேசுவதற்குப் பாயின்ட்டே கிடைக்கவில்லை.

கவின் – லாஸ் காதலை விமர்சித்தவர்களை வில்லன் மாதிரி பேசினவர்கள், சேரனைப் படு கேவலமாக பேசினவர்கள் எல்லோருக்கும், லாஸ் குடும்பம் சொன்ன காரணங்களுக்கு என்ன பதில் சொல்வார்களென ஆர்வமாக இருக்கிறேன். அவர்கள் சொன்ன பின்விளைவுகளைக் கேட்டீர்களா? ‘காதலே வேணாம்’ என யாருமே சொல்லவில்லை. கேமிரா முன்னாடி காதலித்துத் தொலைக்காதீங்க என்று தான் சொன்னோம். அதையே தான் சேரன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். பார்வையாளர்களிடம் இருந்து கேள்வி வந்தது. ஃபோன் செய்பவர்கள் கேட்டார்கள். கமல் அட்வைஸ் செய்தார். பார்வையாளர்கள் கைதட்டுகிறார்கள், அப்பொழுது நாம் செய்ததெல்லாம் சரியென்ற மொக்கையான லாஜிக்கை வ்சித்துக் கொண்டு, மற்றவர்கள் எல்லாத்தையும் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்தார். இப்ப அவங்க குடும்பமே வந்து அதையே தான் சொல்லியுள்ளனர்.

“எல்லாத்தையும் ஹோல்ட் பண்ணிக்கலாம். நான் உள்ளே வந்த போது எப்படி இருந்தேனோ, அப்படி இருக்கணும்னு என் ஃபேமிலி ஆசைப்படுறாங்க. நான் அப்படி மாறணும். என்னால என் குடும்பம் கஷ்டப்பட வேண்டாம். நீ எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணு. நீயும் ஹாப்பியா இரு. நானும் ஹாப்பியா இருக்கேன். ப்ளீஸ்” என லாஸ் தெளிவாகப் பேச, ரொம்ப சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு, அடுத்த பெர்ஃபாமன்ஸ்க்கு தயாராக இருந்தார்.

ஒரு ஹாய், ஹலோ, ஒரு ஸ்மைல் என அழகாக விலகி இருக்கலாம். பார்க்கும் பொழுதெல்லாம் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு, பெர்ஃபாமன்ஸும் பண்ணலாம். இதில் கவின் எதைச் செய்யப் போகிறார்?

இன்று மைக் விஷயத்தில், சாண்டியைக் கலாய்த்து விட்டார் பிக் பாஸ். தர்ஷனோட அம்மாவும் தங்கச்சியும் வந்தார்கள். ரொம்ப ஜோவியலாக அனைவரிடமும் பேசினார்கள். அவங்க பிறந்த நாள் வரப்போகுது என கேக் வெட்டினர். பிறந்த நாள் எனத் தெரிந்த உடனே போய், இன்ஸ்டன்டா ஒரு கிராஃப்ட் செய்து கிஃப்ட் கொடுத்து அசத்தினார் முகின். தர்ஷனுக்கு, அவன் தங்கச்சி அட்வைஸ் பண்ண, அதைப் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டார் தர்ஷன். க்யூட்டான சீன்.

அடுத்ததாக, “வாயாடி பெத்த புள்ள” பாட்டு போட்டு வனிதாவின் குழந்தைகள் உள்ள வந்தனர். ரொம்ப எதார்த்தமாக இருந்தது. வனிதாவின் பெண்கள் அளந்து அளந்து தான் பேசினார்கள். வீட்டிலி இருந்த மொத்தப் பேரும் செம்ம ஜாலியாக விளையாடிக் கொண்டு இருந்தனர். பெரிய பெண் வனிதாவிற்கே அட்வைஸ் சொன்னார். நல்ல சீன். இரண்டு பேருக்கும் சாப்பாடு ஊட்டி விட்டு, பொண்ணுங்களை கண் கொட்டாமல்ப்பார்த்துக் கொண்டே இருந்தார். நேற்று வனிதா ரொம்ப அழகாகத் தெரிந்தார்.

ஒரு பெரிய பை நிறைய தான் செய்த கிராஃப்ட்ஸைக் கொடுத்து அனுப்பினார் முகின். ஏற்கெனவே முக்கால்வாசியை பிக் பாஸ் டீம் எடுத்துக் கொண்டு போய்விட்டனராம். அப்பவும் இவ்வளவு வைத்திருக்கிறார். தூள்!

‘ரவுடி பேபி’ போட்டு எல்லோரும் நடனமாட, ஒரே நாளில் எவ்வளவு மகிழ்ச்சி ஹவுஸ்மேட்ஸுக்கு அந்தப் பக்கம் சாண்டி தன் வீட்டிலிருந்து வந்தால் என்னென்ன கொடுக்க வேண்டுமென எடுத்து வைத்துச் சோதித்துக் கொண்டிருந்தார். ‘யோவ் பிக் பாஸு போதும்யா சாண்டியைக் காக்க வச்சது சீக்கிரம் அவங்க பேமிலியைக் கூட்டிட்டு வாய்யா’ என்றிருக்கு.

வனிதா பெண்கள் போகும் போதே, சேரன் கண்ணில் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டிருந்தார். அடுத்ததாக அவர் குடும்பம் உள்ளே வந்தனர். அவரோட அம்மா, தங்கை, மகள் மூன்று பேரும் வந்தார்கள். இன்னொரு உணர்ச்சிக்கரமான அத்தியாயம். சேரன் அம்மா தான் சோ கியூட். சேரனிடம் இருந்ததை விட பசங்க கூட தான் அதிகமாக இருந்தார். சாண்டியை ரொம்பவும் பாராட்டினார். இவங்க மட்டும் இல்லை, இதுவரைக்கும் வந்த எல்லாக் குடும்பத்திற்கும் சாண்டியை ரொம்பவும் பிடித்துள்ளது. பிரில்லியண்ட். மொத்த ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் பிடிக்கறது எல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். சாண்டி இதை உணர்ந்து தன் கேரியரை அமைத்துக் கொண்டால், ஒரு பெரிய ரவுண்ட் வரலாம்.

சேரனின் மகள் அவரிடம் சீரிஸாகப் பேசிக் கொண்டிருந்தார். ‘உனக்கு நானும், அக்காவும் தான் பொண்ணு’ எனக் கோவமாக சொல்லிக் கொண்டிருருந்தார். It’s pure GIRL Thing.

மொத்தத்தில் நேற்றைய அத்தியாயம் சென்டிமென்ட் நிறைந்த ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் சினிமா பார்த்த மாதிரி இருந்தது. சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் நம்மூரில் சென்டிமென்ட் சினிமாதான் இப்பவும் சூப்பர் ஹிட் ஆகிறது. நமக்கு வேற வழியே இல்ல.

– மகாதேவன் CM