32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

Dinesh R சேலம் Published: 25/02/2023 2 நிமிட வாசிப்பு Updated: 26/02/2023 சினிமா
எழுத்து அளவு:

வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா நடிப்பில், பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மார்டின்’ திரைப்படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குநர் AP அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரம்மாண்டத்தையும், துருவா சர்ஜாவின் கதாபாத்திரத்தையும், படத்தைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தருவதாகவும் அமைந்திருந்தது. இவ்விழாவில் வெளியிடப்பட்ட டீசரை ரசிகர்கள் உற்சாக கரவொலியுடன் வரவேற்றனர்.

வெளியான நொடியிலிருந்து இணையம் முழுக்க தீயாகப் பரவி வரும் டீசரை, இந்தியா முழுக்கவே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

நடிகர்கள்:

>> துருவா சர்ஜா
>> வைபவி சாண்டில்யா
>> அன்வேஷி ஜெயின்
>> சிக்கண்ணா
>> மாளவிகா அவினாஷ்
>> அச்யுத் குமார்
>> நிகிதின் தீர்
>> நவாப் ஷா
>> ரோஹித் பதக்

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – AP அர்ஜுன்
கதை – ஆக்சன் கிங் அர்ஜுன்
தயாரிப்பு – உதய் K மேத்தா
தயாரிப்பு நிறுவனம் – வாசவி என்டர்பிரைசஸ்
தியேட்டர் டீஸர் இசை – ரவி பஸ்ரூர்
வசனம் – AP அர்ஜுன்
எழுத்துக் குழு – சுவாமிஜி, கோபி
இசை – மணி சர்மா
பின்னணி இசை & ஒலி வடிவமைப்பு – ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு – சத்யா ஹெக்டே
படத்தொகுப்பு – கே எம் பிரகாஷ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.