32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தேஜாவு இயக்குநருடன் இணையும் தர்புகா சிவா

Dinesh R சேலம் Published: 25/02/2023 1 நிமிட வாசிப்பு Updated: 26/02/2023 சினிமா
எழுத்து அளவு:

தேஜாவு திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழும் ஆர்கா என்டெர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த் ஆகியோர் ஒப்பந்தம் செயப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ‘கிடாரி’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘முதல் நீ முடிவும் நீ’ ஆகிய படங்களில் தனது பாடல்கள் மூலம் முத்திரையைப் பதித்து இசை ரசிகர்களை தன் வசப்படுத்திய தர்புகா சிவா இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் பணியாற்றுவது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், மேலும் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமையுமென்று தயாரிப்பாளர் புகழ் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.