பெங்களூருவின் வொயிட்ஃபீல்டில் உள்ள பார்க் ஸ்கொயர் மாலில் எஸ்பிஐ (SPI) சினிமாஸ், இதுவரை அனுபவித்திராத புத்தம் புதிய திரையரங்க அனுபவத்தை அளிக்கும் வகையில் நான்கு அட்டகாசமான திரைகள் கொண்ட அரங்கத்தைத் திறந்துள்ளது. மொத்தம் 696 இருக்கைகள் கொண்ட அத்திரையரங்கம், மாலினுடைய மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் உள்ளன.
இந்தியாவிலேயே, SLS ரிப்பன் டெக்னாலஜி எனும் அதி நவீன தொழில்நுட்பம் உடைய இரண்டாவது திரையரங்கம், ஆரா சினிமாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 4K ரெசலூஷன், 3டி டெக்னாலஜி, டால்பி அட்மாஸ் என ரசிகர்களின் படம் பார்க்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு ஆரா சினிமாஸ் நகர்த்தியுள்ளது.
எஸ்பிஐ-இன் அடையாளங்களில் ஒன்றான பாப்கார்னுடன், மிஷேலின் நட்சத்திர செஃப்பான மைக்கேள் பெஸ்ஸியின் சுவையான கோல்ட் காஃபியும், நாவில் கரையும் டோனட்டும் ஆரா சினிமாஸின் மெனுவில் பிரதான இடம் பிடித்துள்ளன.
வரிசையில் நின்று டிக்கெட் வாங்கும் சிரமத்தைத் தவிர்க்க, 20 தானியங்கி கியாஸ்க்கை ஏற்பாடு செய்துள்ளனர் ஆரா சினிமாஸ். ஒரு மொபைல் நம்பர் இருந்தால் போதும், மிகச் சுலபமமாக அனுமதி சீட்டைப் பெறலாம். இணையத்தில் முன் பதிவு செய்ய விரும்புபவர்கள், SPI Cinemas App மூலமாகவோ, அல்லது அவர்கள் இணையத்தளமான www.spicinemas.com–இலே செய்து கொள்ளலாம்.
“ஆரா சினிமாஸைத் திறப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இது பெங்களூருவில் எங்களது இரண்டாவது திரையங்கம். உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெரு உவகை கொள்கிறோம்” என்றார் எஸ்பிஐ சினிமாஸின் ஸ்வரூப் ரெட்டி.