32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கூஸ்பம்ப்ஸ்: புத்தகத்துக்குள் பொதிந்திருக்கும் ஆபத்து

Dinesh R சேலம் Published: 16/10/2018 1 நிமிட வாசிப்பு Updated: 28/10/2018 அயல் சினிமா
எழுத்து அளவு:

Goosebumps-2-curtain-raiser

2015 இல், வெளியான கூஸ்பம்ப்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு தொடர் சங்கிலியாக அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது!

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தி ப்ராஸ் பாட்டில் (The Brass Bottle, 1964; தமிழில், பட்டணத்தில் பூதம், 1967), ப்ளாக் பியர்ட்ஸ் கோஸ்ட் (Black Beard’s Ghost, 1968), கூஸ்பம்ப்ஸ் (Goosebumps, 2015) போன்ற படங்களில் முறையே ஜாடியிலிருந்தோ, மாயாஜால கதைகளை அலசும் புத்தகங்களிலிருந்தோ முறையே ஒரு பூதமோ, விசேடக் குணாதிசயங்களும் விசித்திரமான வடிவமைப்புகள் கொண்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் உயிர்த்தெழுந்து உலா வரும் அதி அற்புத காட்சிகளைப் பல படங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம்! புத்தம்புதியதாகப் புதுப்பொலிவுடன் பவனி உலா வருகிறது, கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன்.

வார்டன்க்ளிஃப் என்கிற ஒரு சிறிய ஊரில், சானி க்வின் (ஜெரமி ரே டெய்லர்) மற்றும் சாம் கார்டர் ஆகிய இருவர், ஆர்.எல்.ஸ்டைன் (ஜாக் ப்ளாக்) என்பவருக்குச் சொந்தமான பழைமையானதொரு மாளிகையில், ஹாண்டட் ஹாலோவீன் என்கிற ஒரு புராதன புத்தகமொன்றைக் காண்கிறார்கள். பக்கங்களைப் புரட்டும் போது ஸ்லாப்பி என்கிற ஓர் உயிரினத்தைத் தெரியாத்தனமாக வெளியேறி விடச் செய்கிறார்கள்! நாசவேலைகளில் இறங்க முற்படும் அதனைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் சானி, சாம், ஸ்டைன், சாரா க்வின் ஆகிய அனைவரும் இணைந்து செயல்படுகிறார்கள்!

ஆரி சண்டெல் இயக்க, டாமினிக் லூயிஸ் இசையமைத்துள்ளார். பேரி பீட்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு இப்படம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.