
சதுரங்கம் விமர்சனம்
சதுரங்கம் - அதிசயமாய் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. கோ படத்தின் பரவலான வெற்றி காரணமாக இருக்கலாம்.'திசைகள்' என்னும் வாரயிதழில் வேலை செய்யும் திருப்பதிசாமி, சமூக அவலங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக் கொணருபவர். உண்மைகளை பகிரங்கமாக எழுதும் நேர்மையாளனுக்கு ஏற்படக் கூடிய சங்கடங்கள் திருப்பதிசாமிக்கு எழுகிறது. அச்சங்கடங்களில் இருந்து திருப்பதிசாமி எப்படித் தப்பினார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.ஸ்ரீகாந்த நாயகனாக. 2006ல் வர வேண்டிய படம்.துரோகி(2010) படத்திற்குப் பிறகு வெளியாகி உள்ளது. தெனாவட்டனவராய் அறிமுகப்படுத்தப்பட்டு காரியத்தில் வீர்யமுள்ளவரைப் படம் முடியும் வரை தோன்றுகிறார். ஒட்ட நறுக்கிய தலை முடியுடனும், சிறு புன்னகையைத் தேக்கிய முகத்துடனும் வரும் ஸ்ரீகாந்திற்கு இது முக்கியமான படமாக இருக்கும். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டும் பொழுது கா...
















