
கந்தசாமி விமர்சனம்
நாளை.. நாளை..
என
நாட்களை தள்ளி
ஒரு வழியாக
"கந்தசாமி" -ரசிகர்களை
கலக்க களம்
குதித்து விட்டார்
கடந்த வெள்ளியன்று.எப்படியும் கலக்குவார்
என எதிர்பார்ப்பில்
எலும்புகள் நொறுங்க
டிக்கெட் வாங்கிய
ரசிகர்கள்..
களிப்படைந்தனரா? இல்லை..
கடியடைந்தனரா?அதற்கு
'ஆம்', 'இல்லை'யென
ஆருடம்
வார்த்தைகள் இரண்டுக்குள்
வரையுறைக்க முடியாது.எதிர்பார்ப்புகள் அதிகமெனில்
ஏமாற்றம்.
எதிர்பார்ப்பற்று போனால்
'எஞ்சாய்மென்ட்'."கந்தசாமி"- மூன்று வருட உழைப்பு, கிராமங்களை தத்தெடுக்கும் நூதன விளம்பரம், பட பூஜை அழைப்பிதழை திறந்தால் 'ட்ரெய்லர்' என ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பை ஆழமாக விதைத்து விட்டது.ரமணா, அந்நியன், சிவாஜி என மூன்று வெற்றிப் பட கதைகளின் சமச்சீரான கலவை தான் கந்தசாமியின் கரு. பணமும், உழைப்பும் அபிரிதமாக செலவிடப் பட்டிருக்கிறது. ஆ...