32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

232 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 12)
துப்பாக்கி விமர்சனம் சினிமா

துப்பாக்கி விமர்சனம்

சகுனி, பில்லா 2, தாண்டவம், மாற்றான் என தொடர் ஏமாற்றங்களில் இருந்து ரசிகர்கள் மீளவும், இந்த வருட தீப ஒளி திருநாளைக் கொண்டாட்டமாக்கவும் வந்திருக்கும் இளைய தளபதி விஜய்யின் படம். விடுமுறைக்கு வரும் இராணுவ வீரர் ஒருவர், தீவிரவாதிகள் திட்டமிடப்பட்டிருக்கும் வெடுகுண்டு தாக்குதலை முறியடிக்கிறார். அதை தொடர்ந்து தீவிரவாதிகளின் தலைவன்  வகுக்கும் வியூகங்களை இராணுவ வீரர் எப்படி சமாளிக்கிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது. ஜெகதீஷ் என்னும் இராணுவ அதிகாரியாக விஜய். இளமை துள்ளலுடன் அழகாய் பாத்திரத்தில் பொருந்துகிறார். […]

13/11/2012 admin
ஸ்கைஃபால் விமர்சனம் சினிமா

ஸ்கைஃபால் விமர்சனம்

Bond.. James Bond. 23 படங்கள். 50 வருடங்கள். உலகை வசீகரித்துக் கொண்டிருக்கும் Ian Fleming-இன் இறவாக் கதாபாத்திரம். ஏதாவது ஒரு நாட்டிற்குள் தனியொருவராய் நுழைந்து, வில்லனின் ஆராய்ச்சிக் கூடத்தை நிர்மூலமாக்கும் வழக்கமான  007 படமல்ல இது. ஓர் அட்டகாசமான துரத்தும் காட்சியுடன் தொடங்கினாலும் படம் முழுவதும் ஏராளமான ஆச்சரியங்கள். ஒரு சிறு துரும்பைக் கூட உடைக்காமல் படத்தின் வில்லனை கைது செய்து விடுகிறார் 007. சிறையில் இருந்து தப்பிக்கும் வில்லனின் வியூகத்தை 007 எப்படிச் சமாளிக்கிறார் […]

03/11/2012 admin
இயற்கை அன்னை கவிதை

இயற்கை அன்னை

  விரி கடலும் தொடு வானமும், வானில் தவழும் வண்ண மேகமும், மேகத்தினூடே மின்னும் சூரிய, சந்திர விண்மீன்களும் தந்தாள்! பச்சை கம்பள புல்வெளிகளும், பனிமூடிய மலை முகடுகளும், மலை முகட்டினின்று பொன் வெள்ளி தகடென வழியும் அருவிகளும் தந்தாள்! கனிம வளங்களும், அடர் கானகமும் தந்து, உயிர்க்கு அமிர்தமாம் மழையும் மாநதிகளும் தந்தாள்! பசிப்பிணி போக்கும் அருங்கனிகளும், இன்ன பிறவும் தந்தாள் வனப்பு மிகு வண்ண மலர்களும் தந்து கூறினால் இயற்கை அன்னை என் செவியில், […]

30/10/2012 admin
இஸ்ரேலின் அப்பாடக்கர்கள் கட்டுரை

இஸ்ரேலின் அப்பாடக்கர்கள்

என் அப்பா M.A. வரலாறு  படித்தவர், அதனால் தானோ என்னவோ எனக்கும் வரலாற்றின் மேல் ஒரு தனி ஆர்வம் உண்டு.. ஒரு முறை ஹைதிராபாத்திலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து விழுப்புரத்தில் இருக்கும் என் வீட்டுக்கு சென்றிருந்தேன்.. எப்பொழுதும் பேருந்து நிலையம் வந்து அழைத்துசெல்லும் என் தந்தை அன்று ஏனோ ஷேர் ஆட்டோ பிடித்து நீயே வந்துடு என்று கூறிவிட்டார்.. ஞாயிறன்று  என் தந்தைக்கு, அப்படி என்ன வேலை இருக்கப்போகுது  என்று எண்ணிக்கொண்டே வீட்டை  அடைந்த எனக்கு கோபம்.. […]

18/10/2012 admin
மாற்றான் விமர்சனம் சினிமா

மாற்றான் விமர்சனம்

அயன், கோ என இரண்டு வெற்றிப் படங்களின் தொடர்ந்து வரும் கே.வி.ஆனந்தின் நான்காவது படம். இரட்டையர் பற்றிய படம் என்பது கூடுதல் எதிர்பார்ப்பிற்கான காரணம். தனது தந்தையின் ‘எனர்ஜியான்’ என்னும் ஊட்டச்சத்து பானத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக ஐயப்படும் விமலன் கொல்லப்படுகிறான். விமலனுடன் ஒட்டிப் பிறக்கும் அகிலன், விமலனின் கொலைக்கு காரணமானவர்களை நூல் பிடித்து செல்லும் பொழுது கண்டுபிடிக்கும் திடுக்கிடும் விடயங்களுடன் படம் நிறைவுறுகிறது. இரட்டை வேடத்தில் சூர்யா. வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட இரட்டையர்கள். அதை காட்சிப்படுத்தவே […]

13/10/2012 admin
சாட்டை விமர்சனம் சினிமா

சாட்டை விமர்சனம்

நடிகர்களின் பெயர்கள் போடும் பொழுதே அரசுப் பள்ளிகளின் மீது சாட்டையை வீசத் தொடங்கி விடுகிறார் அறிமுக இயக்குநர் அன்பழகன். லட்சிய ஆசிரியர் ஒருவர் அலட்சியமாக இயங்கும் அரசுப் பள்ளிக்குள் நுழைந்தால் என்னாகும் என்பது தான் படத்தின் கதை. ஈசன் படத்தில் உதவி ஆணையாளர் சங்கைய்யா பாத்திரத்திற்கு சரியாக பொருந்தியது போலவே இப்படத்திலும் சமுத்திரக்கனி.. தயாளன் என்னும் ஆசிரியர் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். புகார் பெட்டி ஒன்று வைத்து மாணவர்களின் பிரச்சனைகளையும், எதிர்பார்ப்புகளையும் கேட்டறியும் உன்னத ஆசிரியராக வலம் […]

26/09/2012 admin
சாருலதா விமர்சனம் சினிமா

சாருலதா விமர்சனம்

சன் பிக்சர்ஸில் இருந்த ஹன்சராஜ் சக்சேனாவின் ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ டிஸ்ட்ரிப்யூட் செய்யும் முதல் படம். ‘அலோன்’ என்ற தாய்லாந்து படத்தைத் தழுவி தமிழில் ‘சாருலாதா’வாக மாற்றியுள்ளனர். ஒரிஜினல் ஸ்டோரி என தாய்லாந்துக்காரர்களின் பெயர்களை மறக்காமல் போட்டுள்ளனர். ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களில் ஒருவரான சாருவிற்கு காதல் பிறக்கிறது. ஆனால் எதிர்பாராமல் சாரு இறந்து விட, சாருவின் காதலன் லதாவை சாரு என நினைத்து காதலித்து வருகிறான். ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் லதாவை கொன்று அந்தக் கல்யாணத்தை தடுக்க பார்க்கிறது […]

23/09/2012 admin
டுர்ர்ர்ரீ கட்டுரை

டுர்ர்ர்ரீ

படிக்கிறோமோ இல்லையோ.. புக் ஷாப்பிற்கு போனா சும்மாவாச்சும் ஒரு புக் வாங்கணும்னு தோணும். அன்னிக்கும் அப்படித் தான். கையில காசும் அதிகமா இல்ல. குட்டிப் போட்ட பூனையாட்டும் சுத்திட்டிருந்த தினேஷின் தோளைப் பிடிச்சிழுத்து, “நல்ல புக் ஒன்னு சொல்லுடா?” என என் பட்ஜெட்டையும் சொன்னேன்.  அவன் யோசிக்காம, “வாடிவாசல்” என்றான். “வாடி வாசலா?” “செம புக். சூப்பரா இருக்கும். ஜல்லிக்கட்டு பத்தி புக்.” “உன்கிட்ட இருக்கா?” “இல்ல. மிஸ் பண்ணாம வாங்கிடு. ரொம்ப நல்லா இருக்கும்னு எல்லாம் […]

18/09/2012 admin
சுந்தர பாண்டியன் விமர்சனம் சினிமா

சுந்தர பாண்டியன் விமர்சனம்

  பளபளக்கும் நீல கலர் சட்டை, நல்லவர், வல்லவர் என ஏகப்பட்ட பில்டப்களுடன் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு திரும்பியவாறு சசிகுமார் அறிமுகமாகிறார். ஊரில் உள்ள பாட்டிகள், பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு அவருடன் ஆடிப் பாட விழைகின்றனர். ஆகா ஒரு முடிவோடு தான் இருக்கார் என எச்சரிக்கை ஒலியை சத்தமாக அடிக்கிறார். ஆனால் படம் பார்ப்பவர்களை திரைக்கதையால் அறிமுக இயக்குனர் பிரபாகரன்  ஈர்த்து விடுகிறார்.   நண்பர்களுக்கு ஏதாவது ஒன்றென்றால் முன்ன நிற்கும் பாசக்கார […]

14/09/2012 admin
சுமை தாங்கி கவிதை

சுமை தாங்கி

சிறுவயது முதல் எங்கள் தலையிலே சுமை அலை பாயும் கூந்தலாக.. வயதுக்கு வந்தவுடன் உடலியல் மாற்றங்களின் சுமை பொங்கி வரும் இளமையாக.. கணவனைக் கைப்பிடித்ததும் வயிற்றிலே சுமை தாய்மை என்னும் கருவாக.. பெற்று இறக்கியதும் குழந்தைகளின் தொல்லை அன்புச் சுமையாக.. தள்ளாடும் முதுமையிலும் நெஞ்சிலே சுமை மனக்கவலைகளாக.. நாங்கள் இன்னும் சபிக்கப்பட்ட உயிரினமாய் பூமித்தாய்க்குச் சுமையாக. – தமிழ் ப்ரியா

12/09/2012 admin