Shadow

Author: admin

நஸ்ரியாவின் நிக்காஹ்!

நஸ்ரியாவின் நிக்காஹ்!

சினிமா, திரைத் துளி
2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தமிழ்த்திரையுலக கண்டுபிடிப்பு நஸ்ரியாதான். இளமை கொஞ்சும் குறும்புடன் அறிமுகமாகி உடன் நடிக்கும் நடிகர்களிடம் இப்படி ஒரு திறமை பார்த்ததில்லை என ப் பாராட்டப்படும் நஸ்ரியாவுக்கு  நேற்று பிறந்த நாள். “நடிகையாக இது என்னுடைய முதல் பிறந்த நாள். இத்துடன் என்னுடைய முதற்படமும் என்னுடைய மிக முக்கியப் படமுமான 'திருமணம் எனும் நிக்காஹ்' திரையிடப்பட  தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பிரியா. என் இயல்பான சுபாவத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரம் இது. படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணத்திலும் என் பாத்திரத்தை ரசித்து நடித்தேன்.  இந்த இனிய பிறந்த நாளில் எனக்கு  ஊக்கமும், ஆதரவும் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார். ...
நானி – வாணியின் ‘ஆஹா கல்யாணம்’

நானி – வாணியின் ‘ஆஹா கல்யாணம்’

சினிமா, திரைத் துளி
யஷ் ராஜ் ஃப்லிம்ஸ் இந்தியத்  திரையுலகில் தங்களுக்கென ஒரு பிரத்தியேக இடத்தை தரமான படங்கள் மூலம் நிர்மாணித்து கொண்டவர்கள். சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கொண்டுள்ள யஷ் ராஜ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் 'ஆஹா கல்யாணம்' மூலம் தடம் பதிக்க உள்ளனர். ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற 'பேண்ட் பஜா பராத்' படத்தைத் தமிழில் தயாரித்து உள்ளனர். சடங்கு, சம்பிரதாயம் உள்ளிட்ட ஆடம்பரத் திருமணங்களைப் பற்றியும், அந்தத் திருமணத்தை நடத்தும் நிறுவனங்கள் பற்றியும், இசை கலந்த  காதல் உணர்வோடு கலவையாகத்  தயாரிக்கப்படும் படம் தான் ' ஆஹா கல்யாணம்'.   நான் ஈ  படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நானி, துடிப்புள்ள  நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மும்பையிலிருந்து  வரும் மற்றொரு இளம் நாயகி வாணி குப்தா  நாயகியாக நடிக்கிறார் . அழகுப்புயலாக வளம் வரும் வாணி, நானியுடன்  இனிப்பும் கா...
“தூம்: 3” – அமீர், காத்ரீனா, அபிஷேக்

“தூம்: 3” – அமீர், காத்ரீனா, அபிஷேக்

சினிமா, திரைச் செய்தி
டிசம்பர் 20 அன்று உலகெங்கும் 4800 ஸ்க்ரீனில் வெளிவர இருக்கிறது. தமிழ்நாட்டிலும் 200 ஸ்க்ரீன்களுக்கு படம் திரையிடப்படுகிறது. தமிழில் ‘டப்’ செய்யப்படும் முதல் அமீர்கான் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நேரடி தமிழ்ப்படங்களான ‘என்றென்றும் புன்னகை’ மற்றும் ‘பிரியாணி’யுடன் களத்தில் இறங்குகிறது. படத்தின் பிரமோஷனுக்காக நேற்று சில மணி நேரங்கள் சென்னை வந்து சென்றனர் படக்குழுவினர்.காத்ரீனா கைஃப் மற்றும் அபிஷேக் பச்சனுடம் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார் அமீர்கான். ‘கஜினி, 3 இடியட்ஸ்’ போன்ற முழு கமர்ஷியல் படங்கள், பின் சமூக அக்கறையுள்ள படங்கள் என தான் பிரித்துப் பார்ப்பதில்லை என்று கூறும் அவர், ‘நான் எதையும் திட்டமிடுவதில்லை. இந்த நொடி வாழ ஆசைப்படுறேன். எனக்கு தூம்:3 இல் இந்த பாத்திரம் பிடிச்சிருந்தது பண்றேன். வித்தியாசமான பாத்திரங்களில் பண்ணணும் என தேடிப் பண்ணுவதில்லை. ஆனால் ஒரே மாதிரி கதாபாத்த...
ஜீரோ ரூல்ஸ் “49-ஓ”

ஜீரோ ரூல்ஸ் “49-ஓ”

சினிமா, திரைத் துளி
ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் , கவுண்டமணி நடிக்கும் 49-ஓ.சென்னையில் நேற்று துவங்கிய  மழைத்துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது. இது பெரு  மழை.. சிரிப்பு மழை. Zero rules entertainment என்ற புதிய பட  நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குநர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குநர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49-ஓ படப்பிடிப்பில் இந்த சிரிப்பு மழை பெய்தது. கதையின் நாயகனாக நடிப்பவர் கவுண்ட மணி என்றால் சிரிப்புக்கு  பஞ்சமா என்ன!!! படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கவுண்டமணி, இந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்க படத்தின் தலைப்பான 49-ஓ என்ற பரபரப்பான தலைப்பு மட்டுமின்றி, வித்தியாசமான கதை பின்னணியுமே காரணம் எனலாம்.தேர்ந்தெடுப்பதா அல்லது ஒதுக்குவதா என்பதே பின்னணி. இந்தப் படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயி ஆக நடிக்க அவ...
தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ்

தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ்

சினிமா, திரைத் துளி
'இங்க என்ன சொல்லுது' படத்தின் இசை  டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.  இதுவரை வெளிவராத கதை களத்தின்  பின்னணியில், நகைச்சுவை இழை ஓட படமாக்கப்பட்ட இங்க என்ன சொல்லுது திரைப்படத்தில் கதாநாயகனாக வி.டி.வி.கணேஷ் நடிக்க, அவருக்கு  இணையாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.  எஸ்.டி.ஆர். (STR)  இந்தப் படத்தில் கௌரவத் தோற்றத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். கதையை நகர்த்திச் செல்லும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நகைச்சுவை மிளிர எடுக்கப்படும் இந்தப் படத்தின் முக்கிய நடிகர்களான பாண்டியராஜன், மயில் சாமி, இயக்குநர் கே. எஸ் .ரவி குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்வர்ணமால்யா நடித்துள்ளார். இப்படத்தில் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத...
“கள்ளப்படம்” தொடங்கியது

“கள்ளப்படம்” தொடங்கியது

சினிமா, திரைத் துளி
இறைவன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிப்பில் உருவாகி வருகிறது "கள்ளப்படம்". பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜெ.வடிவேல் இப்படத்தின் இயக்குநராய் களம் இறங்குகிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராய் இருந்த ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, காகின் படத்தொகுப்பில், கே இசையமைக்கிறார். இப்படத்தின் துவக்க விழா கடந்த 21 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிப்வாளர் பி.சி.ஸ்ரீராமும் இயக்குநர் மிஷ்கினும் கலந்து கொண்டு படத்தைத் தொடங்கி வைத்தனர். தன்னுடைய இணை இயக்குநரை ஆசிர்வதிக்கும் விதமாக இயயக்குநர் மிஷ்கின் படத்தின் மூன்று காட்சிகளை இயக்கினார்....
நேர்மையைப் பரப்பும் ‘வீரம்’ அஜீத்

நேர்மையைப் பரப்பும் ‘வீரம்’ அஜீத்

சினிமா, திரைத் துளி
மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்ட படி முடிவடைந்த மகிழ்ச்சியும், முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர  காற்றில்  மிதந்தது. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குநர் சிவாவையும், அவரது தொழில்நுட்ப கலைஞர்களையும் மலர்ந்த முகத்தோடு பாராட்டினார்கள் தயாரிப்பாளர்கள். "அஜீத் அவர்களின் தொழில் பக்தியும் , நேர்மையும் மற்றவர்கள் இடையே பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம்" என்று கூறி பொங்கலுக்கு வீரம் நிச்சயம் என பெருமையுடன் கூறினர் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி ஆகியோர். நடிகர்கள்:>> அஜீத் >> தமன்னா >> சந்தானம் >> பாலா >> விதார்த் >> முனிஷ...
விடியும் முன் விமர்சனம்

விடியும் முன் விமர்சனம்

திரை விமர்சனம்
பிரதான கதாபாத்திரங்களை நாயகன், வில்லன் என்ற இரண்டுக்குள் தமிழ்த் திரைப்படம் அடக்கி விடும் (மிக அரிதினும் அரிதாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதால் கணக்கில் எடுக்கவில்லை). இந்த இரண்டையும் கூட இன்னும் சுருக்கி நல்லவனுக்கம் கெட்டவனுக்குமான போராட்டம் என்ற ஒற்றை பரிமானத்தை அடையலாம். ஆனால் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு மெல்லிய முக்கியத்துவத்தையாவது கொடுத்து விடுமளவு திரைக்கதை கொண்ட படம் மிக அபூர்வம். அப்படியொரு அபூர்வம் தான் ‘விடியும் முன்’ திரைப்படம்.   விலைமகளான ரேகாவையும், சிறுமி நந்தினியையும் ஒன்றுக்கும் மேற்பட்ட கும்பல் தேடி அலைகிறது. ஏன் எதற்காக என்பது தான் படத்தின் கதை.   உங்களுக்கு வினோத் கிஷனைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரது குத்திட்ட பார்வை நமக்கு நன்றாக அறிமுகமானதே! ‘நந்தா’ படத்தில் தன் தந்தையை அடித்துக் கொன்றுவிடும் அந்த சிறுவன் தான்...
நவீன சரஸ்வதி சபதம் விமர்சனம்

நவீன சரஸ்வதி சபதம் விமர்சனம்

திரை விமர்சனம்
‘மெஸ்சேஜ்’ சொல்லும் படம் வந்து நாளாகிவிட்டது என்ற குறையை மட்டும் தீர்த்துள்ளது படம்.கார்ப்பரேட் கைலாசத்திலிருந்து படம் தொடங்குகிறது. சிவன் திருவிளையாடல் நிகழ்த்த நால்வரை பூமியிலிருந்து தேர்ந்தெடுக்கிறார். சிவன் வைக்கும் சோதனையில் அந்த நால்வரும் தப்புகின்றனரா என்பது தான் படத்தின் கதை.படத்தில் சேலம் சித்தராஜ் வைத்தியசாலையை சகட்டுமேனிக்குக் கலாய்த்துள்ளனர். கோவை காமராஜ் வைத்தியசாலை எனப் பெயர் மாற்றி சித்ரா லக்ஷ்மணனை நடிக்க வைத்துள்ளனர். அவரது வாரிசாக ஜெய். சிவன் தேர்ந்தெடுக்கும் நால்வரில் ஒருவர். இரண்டாம் நபர் ஊழல் அரசியல்வாதி மகனாக வரும் சத்யன். மூன்றாம் நபர் சொர்ணாக்காவின் கணவராக வரும் வி.டி.வி. கணேஷ். நான்காம் நபர் பவர் ஸ்டாரின் வளர்ச்சி கண்டு வயிறெரியும் ராஜ்குமார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் இவர் பஜ்ஜியாக நடித்திருப்பார். நால்வரும் தண்ணியில் இருந்து தண்ணீரில் மிதக்க...
ஆர்யாவின் ‘த ஷோ பீப்பிள்’

ஆர்யாவின் ‘த ஷோ பீப்பிள்’

சினிமா, திரைத் துளி
சில கூட்டணிகள் அறிவிப்பின் போதே வெற்றி நிச்சயம் என்ற கட்டியத்துடன் அறிவிக்கப்படும் .அதைப் போல ஆர்யாவுடன்  இயக்குநர் ராஜேஷ் அமைத்த வெற்றிக் கூட்டணி  'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தைத் தொடர்ந்து  இப்போது மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்க விழைகிறது. தொடர் வெற்றிகளால் தற்போது உச்சத்தில் இருக்கும் ஆர்யா தன்னுடைய சொந்தப்பட நிறுவனமான 'The Show People' நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார். 2014 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்க உள்ள இந்தப் படத்தில் சந்தானமும் இணைவது கூட்டணியின் பலத்தை அதிகரிக்க உள்ளது. தங்களுடைய முந்தைய வெற்றி படங்களை விட இந்தப் படம்  எல்லா  மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும் என்று கூறுகின்றனர் ஆர்யா-ராஜேஷ் -சந்தானம்  ஆகியோர்.  ...
பண்ணையாரும் பத்மினியும் – இசை வெளியீட்டு விழா

பண்ணையாரும் பத்மினியும் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
விழா தொடங்கும் முன், ஃபியட் கார் வைத்திருப்பவர் சிலரின் அனுபவங்களைக் காணொளியாகப் போட்டனர். ‘ஃபியட் கார்களுக்கு உயிருண்டு. நம்முடன் அவை ஒரு பந்தத்தை உருவாக்கி விடும்’ என காரின் மீதுள்ள காதலோடு அவர்கள் கண்கள் மலரப் பேசினார்கள்.படத்தில் நான்கு பாடல்கள். இரண்டு பாடல்களை கவிஞர் வாலியும், மீதி இரண்டு பாடல்களை படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் எழுதியுள்ளனர். இசையமைப்பாளரைப் பார்க்க பள்ளி மாணவனைப் போல உள்ளார். அடுத்த படத்திற்கும் தன்னை வந்து பார்க்கச் சொன்ன கவிஞர் வாலியை மிகவும் மிஸ் செய்வதாக விழாவில் சொன்னார் ஜஸ்டின்.‘உனக்காகப் பிறந்தேனே  எனதழகா பிரியாமல் இருப்பேனே  பகல் இரவா’ எனத் தொடங்கும் ஒரு பாடலை கவிஞர் வாலி எழுதியுள்ளார். பண்ணையாரான ஜெயபிரகாஷுக்கும், அவரது மனைவியான துளசிக்கும் இடையே உள்ள காதலையும் அன்னியோன்னியத்தையும் பிரதிபலிக்கும் பாடலாகப் பிரமாதமாக உள...
இரண்டாம் உலகம் விமர்சனம்

இரண்டாம் உலகம் விமர்சனம்

திரை விமர்சனம்
இரண்டு அனுஷ்கா. இரண்டு ஆர்யா. இரண்டு காதல். இரண்டு உலகம். ஒன்று நாம் வாழும் உலகம்; இன்னொன்று காதலற்ற உலகம்.படத்தில் இரண்டு காதல்கள் இருந்தாலும் அவைகள் வழக்கமானவையே. செல்வராகவனின் நாயகர்கள் நாயகியைச் சுற்றிச் சுற்றி வம்படியாகவும் வலுக்கட்டாயமாகவும்  ஒரு நெருக்கடியை உருவாக்கிக் காதலிக்க வைப்பார்கள். பெரும்பாலான தமிழ்ப்பட நாயகர்கள் அப்படித்தான். இந்த உலகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரம்யாவை, மதுபாலகிருஷ்ணன் அப்படித்தான் காதலிக்க வைக்கிறார். செல்வராகவனின் அந்த இன்னொரு உலகம் வண்ணமயமாக ஜொலிக்கிறது. மின்னும் காளான்கள், ஒளிக்கும் மரங்கள், மனித தலை கொண்ட விநோத மிருகம் (சிங்கம்), வண்ண நிலா என சி.ஜி. வேலைகளின் அசுர உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. இவ்வளவு இருந்தும் அந்த உலகத்தில் பூக்கள் பூப்பதில்லை. அதற்கு அங்கு ஒரு காதல் தோன்ற(!?) வேண்டும். வர்ணாவின் மீதுள்ள காதலால் மருவன் இரண்டு முறை உயிரைவிட...
வில்லா விமர்சனம்

வில்லா விமர்சனம்

திரை விமர்சனம்
 ஒரு விளம்பரத்திற்காக மட்டும் பீட்சா – 2 என உபயோகப்படுத்தியுள்ளனர். எதிர்மறை சக்திகள் (Negative energy) சூழ்ந்த ஒரு மாளிகையில் தங்குபவர்கள், அவர்களுக்கே தெரியாமல் எதிர்காலம் குறித்துக் கணிக்க வல்லவர்களாக மாறுகின்றனர்.    எழுத்தாளர் ஜெபினாக அசோக் செல்வன். சூது கவ்வும் படத்தில், ஒரு பெண்ணால் வேலையிழக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் தாடி வைத்த முகத்துடன், மருந்துக்குக் கூட சிரிக்காத விரக்தியில் உழல்பவராக வருகிறார். தனக்கு சொந்தமாக மாளிகை இருக்கு என்று அறியும் பொழுதும், நாவலுக்காக ஐந்து லட்சம் ரூபாய் முன் பணம் பெறும் பொழுதும் கூட முகமலர மாட்டேங்கிறார். அவனது தந்தை வரைந்த ஓவியங்களில் உள்ளவை அனைத்தும் ஏன் அப்படியே நிகழ்கின்றன என்ற குழப்பமும், அதற்கான தேடலும் தான் முழுப்படமுமே!நாயகன் என்றால் உத்தமனாக இருக்க வேண்டுமென்ற திரை இலக்கணங்கள் எல்லாம் என்றோ மண்ணோடு மண்...