32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

232 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 3)
தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை கட்டுரை

தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை

பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக  கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் கடக ரேகையும், புமத்திய ரேகையின் தெற்குப் பகுதியில் மகர ரேகையும் அமைந்திருக்கின்றன. ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் […]

16/01/2014 admin
புதிய பொலிவில் “இது தமிழ்” மற்றவை

புதிய பொலிவில் “இது தமிழ்”

இயன்றவரை இனிய தமிழில் என்பதைத் தன் ஆதார நோக்கமாய்க் கொண்டு இயங்கி வரும் “இது தமிழ்” இணைய தளம், இன்று முதல் புதிய பொலிவுடன் தனது இரண்டாவது அத்தியாயத்தை துவக்குகிறது. புதிய நிர்வாகம், புதிய ஆசிரியர் குழு, புதிய தள வடிவமைப்பு, புதிய செயல்திட்டங்கள் இவற்றோடு எங்களின் ஆதார நோக்கமும் சேர்ந்திணைய, இத் தமிழர் திருநாளில் புதிய மேம்படுத்தப்பட்ட “இது தமிழ்” தளத்தினை உங்கள் பார்வைக்கும் பயனுக்கும் படைக்கிறோம். இந்தத் தளத்தின் வளர்ச்சியில் எங்களுக்கு இணையான பங்களிப்பு […]

16/01/2014 admin
வீரம் விமர்சனம் சினிமா

வீரம் விமர்சனம்

தீபாவளிக்கு ஒரு படம், பொங்கலுக்கு ஒரு படமென அடித்து ஆடுகிறார் அஜித். அவரது வெள்ளை-கருப்பு முடி திரையில் தெரிந்ததுமே, திரையரங்கம் அதிர ஆரம்பித்து விடுகிறது. அடிதடிதான் வாழ்க்கை என்றிருக்கும் விநாயகம், அகிம்சாவாதியான நல்லசிவத்தின் மகள் கோப்பெரும்தேவி மீது காதல் வயப்படுகிறார். அடிதடி வாழ்க்கையா அல்லது கோப்பெரும்தேவியா என விநாயகம் முடிவெடுப்பதுதான் படத்தின் கதை. விநாயகமாக அஜித். வெள்ளை தாடி , வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என திரையில் ஜொலிஜொலிக்கிறார். சும்மா வந்து நின்றாலே விசில் சத்தம் […]

10/01/2014 admin
ஜில்லா விமர்சனம் சினிமா

ஜில்லா விமர்சனம்

இந்தமுறை பொங்கல், தமிழ்த்திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் விசேடமானது. நீண்ட நாள் கழித்து அதிசயமாய் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு பொங்கலைச் சிறப்பிக்க ‘கம்ப்ளீட் ஸ்டார்’ மோகன்லாலும் களத்தில் இறங்கியுள்ளார். மதுரையின் தனிப்பெரும் தாதா சிவன். அவர் ஏதேனும் நினைத்தாலே அதை நிறைவேற்றுவான் அவரது வளர்ப்பு மகன் சக்தி. ஒரு விபத்தினைக் காண நேர்ந்து மனம் மாறும் சக்தி, அவனது தந்தையிடம் அடிதடியை விடச்சொல்கிறான். பின் என்னானது என்பதுதான் கதை. பலமுறை பார்த்துச் […]

10/01/2014 admin
ஹரிவராசனம் – தமிழில் Songs

ஹரிவராசனம் – தமிழில்

[youtube]http://www.youtube.com/watch?v=A7UuHVr_Q9Y&w=450&h=285[/youtube] எத்தனையோ திரைப்படப் பாடல்கள் மிகப் பிரபலம் பெற்றிருந்தாலும், இவை பல பக்தி பாடல்களுக்கு இணையாக வருமா என்பது கேள்வியே.. இவற்றில் என்னை கவர்ந்தது கே.ஜே.யேசுதாஸ் பாடிய “ஹரிவராசனம்” பாடலே. இதனை இயற்றியவர் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர்.  இப்பாடல் 8 செய்யுள்களில் 32 வரிகளையும் 108 சொற்களையும் 352 எழுத்துக்களையும் கொண்டுதாக இயற்றப்பட்டுள்ளது. புகழ் பெற்ற பல பாடகர்களால் பல ஒலித்தொகுப்புகளில் பாடி வெளியிடப்பட்டுள்ளது இந்தப் பாடல். என்றாலும் கே. ஜே. யேசுதாஸ் பாடிய […]

08/01/2014 admin
“ஜில்லா”… மனம் திறக்கும் மோகன்லால்.! சினிமா

“ஜில்லா”… மனம் திறக்கும் மோகன்லால்.!

விஜய் – மோகன்லால் இனைந்து நடிக்கும் படம் ஜில்லா. மலையாள சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் மோகன்லால் தமிழில் நடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டவை. ஜில்லா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி? ஜில்லா படத்தில் நடிக்க முதல் காரணம் விஜய். அடுத்தது சூப்பர்குட் என்ற தரமான நிறுவனம். இதற்கெல்லாம் மேலாக நான் மலையாளப் படங்களில் பிஸியாக இருந்த வேளையில் விடாமல் என்னைத் துரத்தி கதை சொன்ன இயக்குநர் நேசன். ஏதோ வருகிறோம், போகிறோம் என்றால் மோகன்லால் […]

07/01/2014 admin
புதிய உற்சாகத்தோடு இளையராஜா! சினிமா

புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்குமுன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய இளையராஜா மருத்துவர்களின் அலோசனையின்படி கட்டாய ஓய்வில் இருந்தார். இதனால் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இருந்தும் ரசிகர்களை ஏமாற்றாமல், வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் தோன்றி ரசிகர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார். தற்போது பூரண நலம்பெற்று மீண்டும் தன் இசைப்பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, புதிய உற்சாகத்தோடு கவிஞர் சினேகன் நடிக்கும் இராஜராஜ […]

06/01/2014 admin
அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’ சினிமா

அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’

இன்றைய இளைய சமுதாயத்தினரின் தவிர்க்க முடியாத அல்லல்களை நகைச்சுவையுடன் சொல்லவரும் ஒரு திரைப்படம். நம் சமுதாயத்தின் இரண்டு கோடிகளில் உள்ள இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரசியமான நிகழ்வுகளும் அதன் விளைவுகளும்தான் புலி வால் எனும் இத்திரைப்படம். எந்த விலை கொடுத்தும் வெற்றியை மட்டுமே தக்க வைக்க நினைக்கும் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் ஓர் ஐ.டி. நிறுவனர் கார்த்திக். கார்த்திக்கின் காதலியான மோனிகா தான் அவனின் பி.ஏ.வும் கூட. கார்த்திக்காக பிரசன்னா; மோனிகாவாக ஓவியா. சூப்பர் மார்க்கெட்டில் வேலை […]

06/01/2014 admin
வீரம் – பத்திரிகையாளர் சந்திப்பு சினிமா

வீரம் – பத்திரிகையாளர் சந்திப்பு

“அஜித் சார், கிராமத்துப் பின்னணில படம் பண்ணி நாளாச்சு. இது மலையாளப் படத் தழுவலோ, ரஜினியின் முரட்டுக்காளை படத் தழுவலோ இல்லை. அஜித் சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவரோட அந்த முகத்தை இந்தப் படத்தில் காட்டியிருக்கோம். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாத் தரப்பினருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஃபேமிலி என்ட்டர்டெயினராக இருக்கும்” என்றார் இயக்குநர் சிவா.  “அஜித் சாரோடவும், ஷிவா சாரோடவும் இது எனக்கு முதல்படம்” என மகிழ்ச்சியில் இருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். படத்தின் […]

02/01/2014 admin
கனவில் சஞ்சரிக்கும் ‘சாகச’ நாயகன் சினிமா

கனவில் சஞ்சரிக்கும் ‘சாகச’ நாயகன்

குறிப்பிட்ட அளவு  திறமைகள் உள்ள சிலர், தனது வாழ்நாளில் கற்பனைக்கு எட்டாத அளவில் பெரிய சாதனைகளையும்  சாகசங்களையும் நிகழ்த்தி அசத்த விரும்புகிறார்கள். அவர்களின் சாகசக்கனவு நிறைவேற நிஜ வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத வகை வகையான சோதனைகளைச் சந்திக்கிறார்கள். சதா சர்வகாலமும் கனவுலகில் சஞ்சரிக்கும் நாயகன்தான் வால்டெர் மிட்டி. லைஃப் பத்திரிகையில்  வேலை செய்யும் அவன், தன்னை ஒரு விமான ஓட்டியாகவும், மருத்துவராகவும், கொலைக்காரனாகவும் வினோத விபரீதக் கற்பனையில் மிதக்கிறான். ஆனால் நிஜ வாழ்வில் அவன் ஒரு பயந்த […]

02/01/2014 admin
ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம் சினிமா

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் புறம்போக்கு படத்தில் ஷாமும் இணைகிறார். குலு மணாலியில் ஜனவரி 14, 2014 முதல் படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது. பிக்கேனர், ஜெய்ப்பூர், பொக்ரான், ஜெய்சால்மர் என முதலில் வடஇந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்திவிட்டு ஹைதராபாத், சென்னைக்கு படப்பிடிப்பிற்காக வரவுள்ளனர். “என் முதல்படம் இயற்கைக்குப் பிறகு ஷாமுடன் மீண்டும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். ஷாம் வேலையில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பவர். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என 2014இன் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும். பல […]

01/01/2014 admin
ஆர்வக்கோளாறில் அனிருத் சினிமா

ஆர்வக்கோளாறில் அனிருத்

இளம் இசையமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நடிக்க வரும் பல வாய்ப்புகளைத் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். இசைக்கு மட்டுமே தனது திரையுலகப் பணி  என்று திட்டவட்டமாக இருக்கும் அனிருத், அதை உரக்கச் சொல்லியும் வருகிறார். ‘ஆக்கோ’ – சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்துக் கேட்டு வியந்த கதை. தன்னுடைய பங்களிப்பு ஓர் இசையமைப்பாளராக மட்டுமே  என்று கூறியதோடு மிகச் சிறந்த பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து  இருக்கிறார். இவரது ஒத்துழைப்பின் பிரதிபலனாக […]

01/01/2014 admin