
வத்திக்குச்சி விமர்சனம்
"வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுற வரையில.."
ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில் வந்த முதல் படமான தீனாவில் வரும் பாடல் வரிதான் அவரது தயாரிப்பில் இரண்டாவது படமாக வந்திருக்கும் வத்திக்குச்சி படத்தின் ஒரு வரி கதை. ஏ.டி.எம். வாசலில் சக்தி என்னும் இளைஞனின் கழுத்தில் கத்தி வைத்து பணம் பறிக்கிறது ஒரு கும்பல். இந்த உரசலில் பத்திக் கொள்ளும் நாயகனின் எதிர்வினை தான் படம். சும்மா கொழுந்து விட்டு எரிகிறது. ஆனால் அதனால் எவரும் எரியப்படவில்லை என்பது தான் படத்தின் பிரத்தியேக விசேஷம்.
நாயகன் சக்தியாக புதுமுகம் திலீபன் நடித்துள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் சாலையில் பார்க்க கூடிய எண்ணற்ற முகங்களில் ஒன்றைப் பெற்றுள்ளார். வாட்டசாட்டமாய் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். வேறு எவரேனும் நடித்திருந்தால், முக்கியமாக முன்னணி நாயகர்கள் யாராவது நடித்திருந...
















